ரேஷன் கார்டு வச்சிருந்தா உங்களுக்கு ரூ.15000…? என்ன காரணம் என்று பாருங்க…!
முழு விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்
கொரோனா பாதிப்பால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா 15000 ரூபாய் தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. பல தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தியேட்டர்கள், மால்கள் உள்பட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.அதன் காரணமாக அதில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களும், அதனை சார்ந்து உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
ஆகையால், கொரோனாவால் வருமானமே இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
இந் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 15,000 வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கலாகி இருக்கிறது.
கொரோனா எதிரொலியால் வருமானம் இன்றி
தவிப்பவர்களுக்கு இந்த 15,000 ரூபாய் ஆறுதலாக அமையும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
Post a Comment