இந்த பதிவின் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டுவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சான்றிதழ் எப்படி பெறுவது என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏழை எளிய குடும்பங்களுக்கும் அவர்களின் ஆண்டு வருமானத்தை பொறுத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு அரசால் இந்த பதிவு எண் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பட்டியல் பல்வேறு விதிமுறைகளின்படி வெளியிடப்படுகிறது.
யாரெல்லாம் பயன்பெறுவர்:
ஒரு குடும்பத்தின் நிலைமை, இருக்கும் வீட்டின் தன்மை, மற்றும் குழந்தைகளின் நிலைமை, ஆண்டு வருமானம் இந்த தன்மைகளின் பொறுத்து பட்டியல் வெளியிடப்படுகிறது.
கிடைக்கும் நன்மைகள் என்ன?
அரசாங்கத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- ரேஷன் கடைகளில் அந்தியோதய அண்ண யோஜனா மூலமாக 25 முதல் 30 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
- அரசு வேலைகள் கிடைப்பதில் முன்னுரிமை
இந்த திட்டத்தில் பெயர் சேர்ப்பது எப்படி?
மக்கள் வசிக்கும் இடம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் எங்கு இருந்தாலும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.
குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ஆகியவை சரியாக பூர்த்தி செய்யவேண்டும்.
நீங்கள் கிராமப்புறங்களில் வசித்துவந்தால் உங்கள் கிராம பஞ்சயாத்து அலுவலகத்தில் இந்த விண்ணப்பத்தை தர வேண்டும்.
விண்ணப்பத்தினை பரிசீலனை செய்தபின்பு உங்களின் பெயர் பட்டியலில் இணைக்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பதிவு எண் இதற்காக வழங்கப்படுகிறது.
உங்கள் பெயர் உள்ளதா என தெரிந்துகொள்வது எப்படி?
இந்த பட்டியல் இந்திய அரசாங்கத்தின் மூலமாக ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் வெளியிடப்படும். அனைத்து விபரங்களையும் Online மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் மாநிலம், மாவட்டம், கிராமம், பெயர் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து விபரங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.
அனைத்து விபரங்களும் https://nrega.nic.in/ என்ற அரசு இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்ப படிவம் பூர்த்திசெய்வது எப்படி?
இந்த அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளல்லாம்.
- விண்ணப்பதாரரின் மாவட்டம், கிராமம், முகவரி சரியாக குறிப்பிடவேண்டும்.
- குடும்ப தலைவியின் பெயர், கணவர் பெயர், பிறந்த தேதி சரியாக Fill செய்யவேண்டும்.
- குடும்ப தலைவியின் ஆதார அட்டை விபரங்கள் மற்றும் வங்கிக்கணக்கு எண்
- குடும்ப ஆண்டு வருமானம் மற்றும் வேலைக்கு செல்பவர்களின் விபரங்கள்
- இந்த அட்டைக்கு பரிந்துரை செய்பவரின் விபரங்கள் குறிப்பிட வேண்டும்.
- குடும்பத்தின் தொழில், சொத்து விபரம், குடும்ப உறுப்பினர்களின் விபரம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்பத்துடன் முகவரி சான்றிதழ், விண்ணப்பதாரரின் அடையாள சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து உங்களின் பஞ்சாயத்து அலுலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Application Form Download Link: https://drive.google.com/file/d/1TkRBPwYSlsfTaIaBzrwIKtJzO-grAvkK/view
Post a Comment