காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 2500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது
தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவதில் ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் படி,ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக அவற்றை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும். ஹெக்டர்க்கு ரூபாய் 2500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்காக விவசாயிகளுக்கு
\
தேவையான ஆவணங்கள்:
1.காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கான விதைகளின் விலை பட்டியல். (அ) நடவு செடிகளின் விலைப்பட்டியல்.
2. கிராம நிர்வாக அலுவலர் அளித்த பட்டா சிட்டா அடங்கல்
3. சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம்.
ஆகிய விவரங்களுடன் உங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பிறப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
APPLICATION DOWNLOD LINK:
Download Timer
(வழிமுறை)STEP BY STEP:
1.உழவன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க
2. ஓபன் பண்ணுங்க
3. இடுபொருள் முன்பதிவு என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க
4.இதுல உங்களுடைய பெயர், அப்பா பெயர், ஆதார் எண், மொபைல் எண், உங்களுடைய மாவட்டம் வட்டாரம், அதாவது தாலுக்கா, உங்களுடைய கிராமம், உங்களுடைய நிலத்தின் புல எண், உங்களுடைய பயிரிடும் நிலத்தின் ஏக்கர் அளவு, இது எல்லாத்தையும் கொடுத்த அப்புறமா இது உங்களுடைய ஸ்கீம் select பண்ணுங்க
பதிவு செய்க என்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணனும் அதுக்கு தோட்டக்கலை உதவி தொகை ஊக்கத்தொகை என்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க பதிவு செய்க பட்டனை கிளிக் பண்ணுங்க உங்களுடைய மொபைல் ஒரு விண்டோ ஓபன் ஆகும் இந்த விண்டோவில் நீங்கள் பதிவு செய்துவிட்டு என்று தமிழ்ல சொல்லுவாங்க அதுக்கப்புறமா உங்களுடைய வேளாண் துறை தோட்டக்கலை துறை அதிகாரியை அணுகுமாறு கேட்டுப்பாருங்க அணுகும் போது உங்களுடைய ஆதார் அட்டை நகல், அப்புறமா நிலத்தின் பட்டா சிட்டா நகல் உங்களுடைய போட்டோவுடன் கூடிய நிலத்தோட போட்டோ, உங்களுடைய பேங்க் பாஸ்புக் கொடுக்க வேண்டியதாக இருக்கும் இது அனைத்தையும் கொண்டு சென்று அவர்கள் சரிபார்த்து உங்களுடைய அப்ளிகேஷனை அக்சப்ட் பண்ணுவாங்க
Post a Comment