காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 2500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது
தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவதில் ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் படி,ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக அவற்றை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும். ஹெக்டர்க்கு ரூபாய் 2500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்காக விவசாயிகளுக்கு
தேவையான ஆவணங்கள்:
1.காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கான விதைகளின் விலை பட்டியல். (அ) நடவு செடிகளின் விலைப்பட்டியல்.
2. கிராம நிர்வாக அலுவலர் அளித்த பட்டா சிட்டா அடங்கல்
3. சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம்.
எங்கு விண்ணப்பிப்பது
தோட்டக்கலைத் துறையின் பிற திட்டங்களின் கீழ், மானியம் பெறாத விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மானிய உதவி கிடைப்பதற்கான பருவம், பயிர் மற்றும் இதர விபரங்களைப் பெற தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உதவி தொகையை பெற உதவும் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்
மேலும் தகவல் அறிய தமிழக அரசு ஆணையை படிக்க CLICK HERE
You have to wait 30 seconds.
Download Timer
இந்த செய்தி ஒரு சில விவசாயிகளுக்கு எனும் சென்று சேராமல் இருந்தது அதனால இந்த செய்தியை மற்ற விவசாயிகளுக்கு கண்டிப்பா ஷேர் பண்ணி விடுங்க உங்க ஊருல எவனும் இல்ல உங்களுக்கு தெரிந்து கொள்ள நிறைய பேர் இருப்பாங்க அவளை கண்டிப்பா இந்த மாதிரியான காய்கறி விவசாயம் பண்ணிட்டு இருப்பாங்க அவர்களுக்கு இந்த செய்தி வந்தது
கண்டிப்பா ஒரு சந்தோஷமான செய்தி யாருக்கும் நான் நினைக்கிறேன் அதனால நண்பர்களுக்கு ஷேர் பண்ணி விடுங்க நன்றி
மனிதர்களை மதிப்போம்!
மனித உயிரைக் காப்போம்!
நன்றி...
குறிப்பு:
உங்களுடைய கருத்துக்களையும் சந்தேகங்களையும் கமெண்ட் பண்ணுங்க எங்களால் முடிந்தவரை உங்களுக்கு விளக்கம் சொல்வோம்
Post a Comment