அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் சேர, ஒவ்வொரு கல்லுாரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும். இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தொற்று பரவல் ஏற்படுவதாலும், நேரடி விண்ணப்ப முறைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.அனைத்து அரசு மற்றும் கலை கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் சேர, 'ஆன்லைன்' விண்ணப்ப முறையை, தமிழக உயர் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, இன்று முதல், ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகள் துவங்குகின்றன.
மற்றும்
என்ற, இணையதளங்களில், மாணவர்கள், வரும், 31 வரை பதிவு செய்யலாம்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமான சான்று, ஜாதிச் சான்று போன்றவற்றை, 25ம் தேதி முதல், ஆகஸ்ட், 5 வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த சந்தேகம் இருந்தால்,
044 - 2235 1014,
044 - 2235 1015
என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல, தனியார் கல்லுாரிகளிலும், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும் என, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த கல்லுாரியின் இணையதளத்தில், நேரடியாக விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
Post a Comment