டித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் இ- பொது சேவை மையம் தொடங்குவதன் மூலம் போதிய வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.
WEBSITE LINK: https://csc.gov.in/
CSC REGISTRATION வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்👇👇👇
நம்மால் தமிழக அரசின் (e -service )இ - சேவை மையத்தினை தொடங்க முடியாது. காரணம், இது மிகப் பெரிய அளவில் பெரிய நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு , அவர்கள் அனுமதி வாங்கி , முன்பணம் செலுத்தி இந்த இ - சேவை மையத்தினை செயல்படுத்துகின்றனர்.
ஆனால், நம்மால், இந்திய அரசின் ( csc ) பொது சேவை மையத்தினை தொடங்க முடியும். இதற்க்கு, இந்திய அரசின் ( csc ) பொது சேவை மையத்தின் இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்தால், அனுமதி கிடைத்தவுடன் நீங்கள் இந்திய அரசின் ( csc ) பொது சேவை மையத்தினை தொடங்களாம்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இ-பொது சேவை மையம் நடத்தி வரும் எஸ்.இமயவர்மன் கூறியதாவது:
சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்பட 21 வருவாய்த் துறை ஆவணங்களைப் பெற இணையம் மூலம் விண்ணப்பித்து பெற அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பொதுமக்கள் இ-பொது சேவை மையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மையத்தை நடத்துவதன் மூலம் படித்த இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பெற்று நல்ல வருமானம் பெறலாம்.
ஜி.எஸ்.டி. பதிவு செய்தல், வருமான வரித் தாக்கல் உள்ளிட்ட சேவைகளையும் கணினியைக் கொண்டு இணையம் வழியே செய்து கொடுத்து சேவையுடன் வருமானம் ஈட்டலாம். மத்திய அரசின் இ-பொது சேவை மையத்தைத் தொடங்க விரும்புவோர் www.digitalseva.csc.gov.in என்ற இணையதளத்தில் ஆதார், பான் அட்டை, வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த 10 முதல் 15 நாள்களுக்குள் இ-பொது சேவை மையம் தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கிவிடும்.
இதற்கு ஒரு கணினி, இணையதள வசதி, பிரிண்டர், கைவிரல் ரேகை பதிவு செய்யும் பயோ-மெட்ரிக் கருவி ஆகியவையும், சேவை மையம் நடத்த போதிய இடவசதியும் இருந்தால் போதும். நீங்கள் தேர்வு செய்யும் இடம் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் இயங்கும் இடமாகவோ, இணைய வழி சேவைகளை அதிகம் நாடும் பொதுமக்கள் கூடும் இடமாகவோ இருந்தால் நல்லது.
இணையவழி சேவைகள்: மின் கட்டணம் செலுத்துதல், பயிர்க் காப்பீடு செய்தல், இரு சக்கர வாகனக் காப்பீடு, தனிநபர் காப்பீடு, ஓய்வூதியத் திட்டப் பதிவு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு ஆகியவற்றையும் செய்து கொடுக்கலாம்.
ஜி.எஸ்.டி., வருமான வரி தாக்கல் தொடர்பாக இணையவழி பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதில் பயிற்சி பெற்று ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றையும் பதிவு செய்து கொடுக்கலாம். ஆங்கிலம் பேச்சுப் பயிற்சி, அடிப்படை கணினிப் பயிற்சிகள், டி.டி.பி., டி.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டேலி. உள்ளிட்ட கணினிப் பயிற்சிகளுக்கான மத்திய அரசின் பயிற்சி ஏடுகள் இ-பொது சேவை மையம் தொடங்குபவர்களுக்கு வழங்கப்படும். இதைக் கொண்டு உள்ளூர் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். இணையவழியில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்த இ-பொது சேவை மையத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, இ-பொது சேவை மையம் வைத்துள்ளவர்கள் 10 பேரை நியமித்து கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடலாம்.
மேலும் விவரம் தேவைப்படுவோர் 72009 41541 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
}சா.சரவணபெருமாள்
Post a Comment