பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கிட்டு அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் நடத்தி, தேவையான கருத்துக்கள் கேட்டறியப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்வாணைய இணையதளம் மற்றும் பள்ளிகள் மூலமாகவும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.



http://tnresults.nic.in/

http://dge1.tn.nic.in/


உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம்.

கொரோனா காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post