First graduate certificate
தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.
கடந்த 2010ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.
இதில், கல்விக் கட்டணம் என்பதை அரசே வரையறுத்துள்ளது. அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும், தனியார் சுயநிதித் தொழிற்கல்லூரிகளில் கட்டண நிர்ணயத்துக்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தையும், பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடப் பிரிவுகளுக்கு அந்தப் பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் இது குறிக்கும். உதாரணத்திற்கு, சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கான ஆண்டுக் கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் என்றால் கல்விக் கட்டணமான ரூ.1.25 லட்சத்தை அரசே செலுத்தும். மீதித் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும்.
அதேபோல ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை உண்டு. மேலும், கடந்த ஜனவரி மாதம் இந்தச் சலுகையை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்தக் கல்விச் சலுகைக்குத் தகுதியுள்ள மாணவர்கள், ’முதல் தலைமுறை பட்டதாரி’ என்கிற சான்றிதழை அரசிடம் பெற்று கல்லூரி விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டியது அவசியம்.
உங்கள் குடும்பத்தில் நீங்கள் தான் முதல் பட்டதாரியா ?
+2 மாணவர்களே தமிழக அரசின் முதல் பட்டதாரி மாணவர்களுக்கான உயர்கல்வி் படிப்புகளுக்கான சலுகைகள்
கலந்தாய்வு (Counseling) மூலமாக தொழில் நுட்ப படிப்புகளை (Professional Course)
அரசு கல்லுரிகள்(Govt colleges)
அரசு உதவி பெறும் கல்லுரிகள் (Govt aided Colleges)
தனியார் கல்லுரிகள் (Self Finance Colleges) சேருபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி கட்டணமும் சலுகைகளும் ?
பொறியியல் படிப்புகள் (Engineering Studies)
அரசு பொறியியல் கல்லுரியில் படிக்கும் மாணவர்களுக்கு Rs.2000 ரூபாய்,
அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுரியில் படிக்கும் மாணவர்களுக்கு Rs.4000 ரூபாய்
தனியார் பொறியியல் கல்லுரிகளில் (Self Finance ) கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு Rs.25000 ரூபாயும் கல்வி கட்டணத்தில் (Tuition Fees) ல் சலுகை கிடைக்கும்
மருத்துவப்படிப்புகள் (Medical Course)
அரசு மருத்துவக் கல்லுரிகளில் MBBS படிப்பவர்களுக்கு Rs.4000
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் படிப்பவர்களுக்கு Rs.125,000 சலுகை கிடைக்கும்
இந்தச் சான்றிதழைப் பெறுவது எப்படி?
கடந்த காலங்களில் இந்தச் சான்றிதழ் பெற பெற்றோரையும், மாணவர்களையும் அலைய விட்டதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதனால் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் அல்லது உங்கள் ஊரில் அருகில் உள்ள csc மையங்களில் ஆன்லைன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் https://www.tnesevai.tn.gov.in என்ற இ சேவை இணையதளத்தை கிளிக் செய்யுங்கள் பின்பு உள்நுழைய உங்களது USERNAME & PASSWORD கொடுத்து கீழே உள்ள CAPTCHA கொடுத்து LOGIN பொத்தானை அழுத்துங்கள்
இந்தப் பகுதியில் உங்களுக்கு தேவையான சான்றிதழைப் பெற REVENUE CERTIFICATE என்பதை கிளிக் செய்யுங்கள்
இந்தப் பகுதியில் முதல் பட்டதாரி சான்று(FIRST GRADUATE CERTIFICATE) என்பதை கிளிக் செய்யுங்கள்
இந்தப் பகுதியில் நீங்கள் விண்ணப்பிக்கும் நபர் அவரது பெயரில் CAN NUMBER பதிவு செய்யவேண்டும் அப்படி செய்திருந்தால் கீழே உள்ள கேன் நம்பர் என்ற இடத்தில் CAN நம்பரை ENTER செய்யுங்கள் அப்படி தெரியவில்லை என்றால் உங்களது பெயர் உங்களது தந்தை பெயர் அல்லது மொபைல் நம்பர் இவற்றை எல்லாம் கொடுத்து கீழே உள்ள search பட்டனை கிளிக் செய்யுங்கள்
இந்தப் பகுதியில் உங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பு யாராவது பட்டப்படிப்பு முடித்து இருக்காரா என்று கேட்கப்பட்டிருக்கும் அப்படி முடித்திருந்தால் yes என்றும் இல்லையென்றால் No என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்
அடுத்து உங்களது உடன்பிறப்புகள் சகோதரர்கள் யாராவது பட்டப்படிப்பு முடித்து இருக்கிறதா அல்லது படித்துக் கொண்டிருக்கிறாரா என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும் அதற்கு படித்து வந்தால் Yes என்றும் இல்லை என்றால் No என்றும் கிளிக் செய்யுங்கள்
பின்பு நீங்கள் கேன் நம்பர் பதிவு செய்யும்போது கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் தானாகவே வந்துவிடும் பின்பு கீழே உள்ள விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
இதில் உங்கள் தந்தை, தாய் பெயர், பிறகு உங்கள் தந்தையின் அப்பா, அம்மா பெயர்கள்(தாத்தா, பாட்டி), அம்மாவின் அப்பா, அம்மாவின் பெயர்கள், உடன்பிறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் வயது ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் கூடவே அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பின்பு நீங்கள் எந்த பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிறீர்களோ அதனை குறிப்பிட வேண்டும் இதற்கு முன்பு என்ன படித்து இருக்கிறோம் அதனை வருடத்துடன் சேர்ந்து குறிப்பிட வேண்டும் அதன்பிறகு தற்போது சேரவிரும்பும் பல்கலைக்கழகத்தின் முகவரியை தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட வேண்டும் பின்பு கீழே உள்ள summit என்ற பொத்தானை அழுத்தவும்
தேவையான ஆவணங்கள்:
பின்பு நீங்கள் கூறியுள்ள விவரங்களுக்கு ஏற்றபடி அதற்கு தேவையான ஆவணங்கள் உங்களது
விண்ணப்பதாரர் PHOTO
குடும்ப அட்டை நகல்
இதில் யாராவது படித்து இருந்தால் அதனை குறிப்பிட்டு இருந்தால் அவருடைய சான்று நகல்
பிறகு இதனுடன், உறுதிமொழி விண்ணப்பம் ஒன்றையும் DOWNLOAD செய்ய வேண்டும். அதில், ‘குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் இல்லையென உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கும் பகுதியின் கீழ் உங்கள் கையெழுத்தும், அதன்கீழ் பெற்றோர் அவர்கள் கையொப்பத்தையும் இடவேண்டும். ஏனெனில், தாத்தா, பாட்டியின் கல்வித் தகுதியை அதிகாரிகளால் விசாரிக்க முடியாமல் போகலாம். அதற்காக பெற்றோர் கையொப்பமிட்ட உறுதிமொழிச் சான்று அவசியமாகிறது.
பின்பு அதனை SCAN செய்து UPLOAD செய்ய வேண்டும் இவற்றையெல்லாம் UPLOAD செய்த பிறகு summit கொடுங்கள்
பிறகு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழிமுறை தோன்றும் இதில் make payment என்பதை கிளிக் செய்யுங்கள் இதில் கேட்கப்படும் ரூபாய் 60 ஆன்லைன் மூலம் செலுத்த உங்கள் வசதிக்கு ஏற்ப முறையில் செலுத்தலாம் செலுத்திய பின்பு
ஒப்புகை சீட்டு ஒன்று தோன்றும் அதை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் குறிப்பிட்டிருக்கும் நம்பரை வைத்து உங்கள் application status தெரிந்துகொள்ளலாம்
மேலும் தகவல் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்
நிறைவில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், சரி பார்ப்பிற்குப் பிறகு தாசில்தாரிடம் ஆன்லைன் கையொப்பம் பெற்று டிஜிட்டல் முறையில் சான்றிதழைப் ஆன்லைனில் பெறவேண்டும்.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்படும் என்பதை நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் நம்பருக்கு SMS அனுப்பப்படும்
எத்தனை நாட்களில் கிடைக்கும்?
ஏழு நாட்களில் கிடைத்துவிடும் என்கிறது தாலுகா அலுவலக வட்டாரம்.
இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த பக்கத்தை லைக் மற்றும் FOLLOW செய்யுங்கள் மேலும் விவரம் அறிய எங்களது Hi Tamil Tech YouTube சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
நன்றி....
Post a Comment