நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) புதிய டிராக்டர் கடன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான டிராக்டர் கடன்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், டிராக்டர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், வங்கி செயலாக்க கட்டணங்கள், இதர கட்டணங்கள் குறித்து விரிவாக பார்போம்.
டிராக்கடர் கடன் : முக்கிய அம்சங்கள்
டிராக்டர், அதன் உதிரி பாகங்கள், கருவிகள், காப்பீடு மற்றும் பதிவு செலவுகளை உள்ளடங்கியதாக மொத்த கடன் தொகை இருக்கும்.
கடன் தொகையில் உச்ச வரம்பு இல்லை.
தகுதியான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த 7 நாட்களில் கடன் வழங்கப்படும்
மாதாந்திர / காலாண்டு / ஆண்டின் படி தவனைகளை திருப்பிச் செலுத்தும் வசதி
கடன் முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் வட்டியில் 1% சலுகை அளிக்கப்படுகிறது.
இணை பாதுகாப்பு:
கடன் தொகையில் 100% க்கும் இணையான மதிப்புக்கு கொண்ட பதிவு செய்யப்பட்ட நிலம் அல்லது அடமான பத்திரம்.
டிராக்டர், அதன் உதிரி பாகங்கள், கருவிகள், காப்பீடு மற்றும் பதிவு செலவுகளின் விலையில் 15% போக கடன் தொகை வழங்கப்படும்
வட்டி விகிதம்:
ஆண்டுக்கு11.95%, (1.05.2016லிருந்து)
திருப்பிச் செலுத்தும் காலம் 1 மாதத்துடன் சேர்த்து 60 மாதங்கள்
SBI-ன் புதிய டிராக்டர் கடன் திட்டம்: கட்டண விபரங்கள்
முன் கட்டணம் (Pre Payment) கிடையாது
வங்கி செயலாக்க கட்டணம் (Processing Fee) 0.5% மட்டுமே.
பகுதி கட்டணம் (Part payment) கிடையாது.
நிலுவை இல்லா சான்றிதழ் நகல் (Duplicate No due certificate)தேவையில்லை
நடைமுறையில் இருக்கும் முத்திரை வரி (Stamp duty) பொருந்தும்
கால தாமதமாம் ஆன அல்லது செலுத்தப்படாத தவணைகளுக்கு ஆண்டுக்கு 1% வட்டி கட்ட வேண்டும்
டிராக்டர் வாங்கிய ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் 2% அபராதம் பிடித்தம் செய்யப்படும்
SI (Standing Instruction) தவறினால், ஒவ்வொரு SI-க்கும் ரூ.253 செலுத்த வேண்டும்
தவணை (EMI) கட்டத் தவறினால், ஒவ்வொரு தவனைக்கும் (EMI) ரூ.562 செலுத்த வேண்டும்
தேவையான ஆவணங்கள்
கடன் பெருவதற்கு முன் கீழே குறிப்பிட்டவைகளை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
* முறையாக பூர்த்திசெய்யப்பட்ட படிவம்
* அண்மையில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
* அடையாள சான்று ; வாக்காளர் அட்டை, பாண் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை
* முகவரி சான்று ; வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை
* நிலம் இருப்பதற்கான பத்திரம்
* டிராக்டர் வாங்கப்போகும் நிறுவனம் வழங்கிய "Quotation"
* வழக்கறிஞர் பெறப்பட்ட சான்று அறிக்கை (Title search report from the panel advocate)
கடன் அனுமதி கிடைத்தவுடன், கீழே குறிப்பிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
* முறையாக செலுத்தப்பட்டதற்கான கடன் ஆவணங்கள்
* நில அடமான பத்திரங்கள்
* பின் தேதியிட்ட காசோலைகள்
கடன் பெற்று டிராக்டர் வாங்கிய பின் கீழே குறிப்பிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
* SBI வங்கி பெயரில் எழுதிக் கொடுத்த (RC Book) பதிவு சான்றிதழ்
* டிராக்டர் வாங்கியதற்கான ஒரிஜினல் ரசீது (Original invoice/Bill)
* விரிவான காப்பீட்டு நகல்
மேலும் தகவல்களுக்கு : https://sbi.co.in/
Post a Comment