ஒரு மாவட்டத்திற்கு ஒரு பயிர் திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
One District one Crop
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நிலவும் சீதாஷேண நிலை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணிகளைக் கருத்தில் கொண்டு, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பயிர் (One District one Crop)என்றத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, குறிப்பாக இந்தியாவில் 540 மாவட்டங்களில், அவற்றுக்கான சிறப்பு மிக்க பயிர் அறிவிக்கப்பட்டு, அதில் 100க்கும் மேற்பட்ட பயிர்களுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டு விட்டது.
உதாரணமாக, கர்நாடகாவின் ராகி, ஆந்திராவின் குண்டூர் மிளாய், ரத்தினகிரியின அல்போன்சா மாம்பழம், தமிழ்நாட்டின் சூரியகாந்தி இப்படி இந்த பட்டியல் நீளுகிறது.
இந்தத் திட்டத்திற்கு மேலும் மெருகூட்டும் விதமாக, அந்தந்த மாவட்டத்திற்கான பயிரை, விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மத்திய அரசு உதவுவது என முடியு செய்துள்ளது.
இதன்மூலம், ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும், வியாபாரிகள் நேரிடையாக தங்கள் விளைபொருட்களை வியாபாரம் செய்யவோ, அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலமாகவோ விற்பனை செய்ய மத்திய அரசு துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளது. இந்த முடிவு செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் வியாபாரிகள் நல்ல லாபம் ஈட்ட முடியும்
Post a Comment