எஸ்.பி.ஐ வங்கியில் உங்க அக்கௌன்ட் இருக்கா?.. ஜாக்பாட் அறிவிப்பால் குதூகலத்தில் திளையுங்கள்.!!
எஸ்.பி.ஐ என்று அழைக்கப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வங்கிக்கணக்கு வைத்துள்ள நபர்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையினால் பல மக்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.
ஏனெனில் சில விசயத்திற்காக கட்டாயம் எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் என்று கூறி துவங்கிய நபர்கள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க விலை என்று கூறி அபராதம் வசூல் செய்யப்பட்டு வந்தது.
சில வங்கிகளில் குறைந்த பட்ச தொகையாக ரூ.500, ரூ.1000 என்று இருந்த நிலையில், சில வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை ஜீரோ ரூபாயும் இருக்கும் படி சில விதிமுறைகள் தளர்த்தப்பட்ட வங்கிகளும் இருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 முதல் ரூ.3000 வரை இருக்கிறது. இந்த தொகையை வங்கி கணக்கு பராமரிக்கப்படும் நபர் பராமரிக்காத பட்சத்தில், அபராத தொகையும் வசூல் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க தேவையில்லை என்றும், குறைந்தபட்ச தொகையை பராமரிக்க தவறிய வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்படாது என்றும் அறிவிப்பட்டுள்ளது. இதனைப்போன்று சேமிப்பு கணக்கிற்கான வருட வட்டி விகிதம் 3 விழுக்காடாக நிர்ணயம் செய்பட்டுள்ளது.
Post a Comment