பான் கார்டு ஆதார் அட்டை இணைப்பது எப்படி வீடியோ பார்க்கக் இங்கே கிளிக் செய்யவும்

எவ்வாறு இணைப்பது?

பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பது எளிது. இதற்கு, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng என்ற வலைதள முகவரிக்குச் செல்லுங்கள்.



அதில் கேட்கப்பட்டுள்ள பான் எண், ஆதார் எண் ஆகியவற்றுடன், ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயரைக் குறிப்பிடவும். ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் குறிப்பிட்டிருந்தால் சதுர வடிவக் கட்டத்தில் ‘டிக்’ அடித்துக்கொள்ளவும். பிறகு ‘கேப்ட்சா’ (Captcha) எண்ணைக் குறிப்பிட்டு சப்மிட் செய்தால் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்வதற்குத் ஒருவர் வருமான வரித் துறை வலைதள முகவரியில் எந்தவித மெயில் கணக்கையும் புதிதாக உருவாக்கிக்கொள்ளத் தேவையில்லை. ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் குறிப்பிட்டால் போதும். வேறு எந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டியதில்லை.



எப்படித் தெரிந்துகொள்வது?

ஆதார் எண், பான் எண்ணுடன் இணைந்துவிட்டதா என்பதை https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற வலைதள முகவரிக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். `எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கும் வசதி இருக்கிறது’ என்று கூறப்பட்டாலும், அதைப் பற்றிய விவரம் எதுவும் வருமான வரித்துறை வலைதளத்தில் குறிப்பிடப்படவில்லை.

Post a Comment

Previous Post Next Post