10 லட்சம் வரை மானியத்துடன் கடன் எந்த வித அடமானமும் இல்லாமல்.. பலருக்கும் தெரியாத அரசின் திட்டம்: விவரம் உள்ளே..!!

படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. பல்வேறு காரணங்களால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

International Labour Organisation (ILO) வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2017-ஆம் ஆண்டு 3.5% சதவீதமும், 2018-ஆம் ஆண்டு 3.6% சதவீதமும், 2019 ஆம் ஆண்டு 3.7% சதவீதமும் உள்ளது.2020 ஆம் ஆண்டு 3.8% சதவீதமாக அதிகரிக்கும் என Global Employment Trends 2020-ன் அறிக்கை தெரிவிக்கிறது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிலில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP (Unemployed Youth Employment Generation Programme ) படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டினை (Capital) இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.
இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (Unemployed Youth) தொழில் தொடங்குவதற்காக 25% சதவீதம் (அதிகபட்ச மானியம் ரூ.1,25,000) மானியத்துடன் (Subsidy) ரூபாய் 10 இலட்சம் வரை கடன் (Loan) வழங்கப்படுகிறது.

UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் நோக்கம் (Objectives):
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்குவது.

தொழிலின் திட்ட மதிப்பு (Project Value):

உற்பத்தி சார்ந்த நிறுவனமாக (Manufacturing Enterprises) இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 10  இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.
சேவை சார்ந்த நிறுவனமாக (Service Enterprises) இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 3 இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.
வியாபாரம் சார்ந்த (Trading- Shop, Only sales Activity) நிறுவனமாக இருந்தால் அதன் திட்ட மதிப்பு (Project Value) 1  இலட்சத்திற்குள் இருந்தால் UYEGP திட்டதில் விண்ணபிக்கலாம்.
அரசு மூலதன மானியம் (Subsidies):

தொழிலின் திட்ட மதிப்பில் அதிகபட்சம் 25%  சதவீதத்தை (அதிகபட்ச மானியம் ரூ.1,25,000) மானியமாக (Subsidy) அரசு அளிக்கிறது.

தொழில் முனைவோர் சொந்த முதலீடு (Entrepreneur Contribution of Capital Investment) :

பொதுப்பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 10 % விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.
சிறப்புப் பிரிவினராக இருந்தால் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5 % விழுக்காட்டை தங்களுடைய சொந்த முதலீடாகத் (Owner Capital Investment) தொழிலில் செலுத்த வேண்டும்.
வயது வரம்பு (Age Limit):

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினரை சார்ந்தவராக இருப்பின் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், சிறப்புப் பிரிவினரைச் சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

சிறப்புப் பிரிவினர் :

மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், திருநங்கையர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள் இத்திட்டத்தில் சிறப்பு பிரிவினர் ஆவர்.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள் (Loan Granting Institution):

UYEGP இத்திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks)  மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.



குடும்ப ஆண்டு வருமான வரம்பு (Family Income):

UYEGP ( Unemployed Youth Employment Generation Programme) திட்டத்திற்கு விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 5,00000-க்குள் இருக்க வேண்டும்.


Apply செய்ய website link

Apply செய்வது எப்படி? YouTube வீடியோ லிங்க் இதோ 👇👇👇https://youtu.be/EReEz-yEDPA

விண்ணப்பிக்கவேண்டிய அரசு அலுவலகங்கள் :

இத்திட்டத்தில் கடன் பெற கீழ்க்கண்ட இணையப் பக்கத்தில் விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பம் பூர்த்தி செய்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பப்பித்தவுடன் உங்களுக்கு உறுதி சான்று (ACKNOWLEDGEMENT) கிடைக்கும் அதனை பிரிண்ட் எடுத்து மாவட்ட தொழில் மையத்தில் தேவையான ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.
https://www.msmeonline.tn.gov.in/uyegp/application_without_upload.php 
படித்த வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற மாவட்ட தொழில் மையங்கள் (DIC-DISTRICT INDUSTRIES CENTER) அணுகி விண்ணபிக்கலாம். மாவட்ட தொழில் மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ளன

இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்து கொள்வதற்கு தமிழ் டெக் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க இந்த பேஜ் லைக் செய்து பாலோ செய்யுங்கள் உங்கள் நண்பர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும் எனில் ஷேர் பண்ணுங்க நன்றி


Post a Comment

Previous Post Next Post