தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றது.
கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதன் இறுதித் தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அடுத்தடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தேர்வு முடிவுகள் தள்ளிப்போனது. இந்த சூழலில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பான அறிவிப்பை கடந்த 29ஆம் தேதி அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டிருந்தது. தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை எங்கு காண்பது:
WEBSIT LINK:
Post a Comment