நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம் பெறுவது எப்படி?



”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தபட்டு வருகிறது இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது.


இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ செலவிட வேண்டும். 

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி அளவு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 25 சதவிகிதமும் இறுதியாக நபார்டு வங்கி மூலம் 25 சதவிகிதமும் மானியமாக வழங்கப்படும். 

மானியம் எவ்வளவு:

ஒரு பயனாளிக்கு ரூ.45,750 வரை மானியம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க தகுதி:

விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் இம்மானியத்தை பெறத் தகுதியானவர்கள். 

கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவர்களிடம் பண்ணைகள் அமைக்கப் போதிய நிலம் இருக்க வேண்டும்.

குறிப்பு:

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பதாரர் பெயரிலோ அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ போதிய நிலம் இருக்க வேண்டும்

ஏற்கெனவே கொட்டகை அமைத்த பயனாளிகள் புதிய கொட்டகை அமைத்துக் கொள்ளவும் கோழிப் பண்ணைகளை விரிவாக்கம் செய்து கொள்ள ஆர்வமும் உள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வாய்ப்புகள் உள்ளன.


தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாவட்டந்தோறும் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் மூலம் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.  

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.”

தேவையான ஆவணங்கள்

1. குடும்ப அட்டை
2. ஆதார் கார்டு
2. வங்கிப் புத்தகம்
3.100 நாள் வேலைவாய்ப்பு அட்டை
4. நில உரிமைச் சான்று (அ) பத்திரம்
5. குடியிருப்பு சான்று
6. சாதி சான்று

“உடனே அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தையும் மற்றும் விரிவான விளக்கத்தையும் பெறவும் 


. அனைத்து மாவட்டத்திலும் இந்த திட்டம் தற்போது படிப்படியாக செயல்படுபட்டு வருகிறது. முன்பதிவு அவசியம்”


Keywords : நாட்டுக்கோழி மானியம், நாட்டுக்கோழி மானியம் 2020, இலவச கோழி வழங்கும் திட்டம் விண்ணப்பம், கோழி பண்ணை அமைக்க ஆகும் செலவு,  நாட்டு கோழி வளர்ப்பு pdf, நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி 2021


Post a Comment

Previous Post Next Post