கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.
அப்படி வெளியிட்ட அறிவிப்புகளில் மிக முக்கியமான அறிவிப்பு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் தான். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெற்றவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அரசு அறிவித்த மூன்று மாத சலுகை ஜூன் மாதத்துடன் முடிந்தது. மூன்று மாதங்கள் சலுகை முடிந்துவிட்டதால் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக கூறினார். இந்த திட்டத்தின் மூலம் 7.40 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
மேலும் 107 நகரங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வீடுகள் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
Post a Comment