வீட்டிலிருந்தே இலவச gas சிலிண்டர் மானியம் வந்ததா என்பதைக் தெரிந்துக் கொள்ளலாம்...

சமையல் எரிவாயு மானியம் தங்களுடைய வங்கிக் கணக்களுக்கு பதிலாக வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், உங்கள் கணக்கில் வழக்கமான மானியம் வருகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தே தெரிந்துக் கொள்ள முடியும்.  சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் மொபைல் மூலமாகவே இதை கண்டறியலாம்.


பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

முதலில் Mylpg.in வலைத்தளத்திற்குச் செல்லவும்.
வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் TAB-கள் படத்துடன் இருக்கும். 
உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.
இண்டேன் நிறுவனத்திடம் இருந்து சமையல் எரிவாயு உருளையை வாங்கிக் கொண்டிருந்தால், அந்த நிறுவனத்தின் TAB-ஐ கிளிக் செய்யவும்.
அப்போது, மானியம் அனுப்பப்பட்டதா இல்லையா என்பதை அறிய புதிய துணைப்பக்கம் ஒன்று திறக்கும்.
பார் மெனுவுக்குச் சென்று 'உங்கள் கருத்தை ஆன்லைனில் கொடுங்கள்' என்று சொல்லும் ‘Give your feedback online’என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்களுடைய மொபைல் எண், எல்பிஜி நுகர்வோர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவல்களை நிரப்பவும்.
இதற்குப் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும்.
Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பக்கத்தில் வெளியாகும். மானியத் தொகை கணக்கில் வந்ததா இல்லையா என்பதை அதில் தோன்றும் விவரங்களில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

WEBSITE LINK:,👇👇👇👇


http://Mylpg.in


Video link: 

https://youtu.be/shHnNrED5kA

3 Comments

Post a Comment

Previous Post Next Post