மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் விவசாயி அல்லாதவரின் விவரங்களையும் மோசடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பணம் பெற்று மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பயிரிடக்கூடிய நிலங்கள் 5 ஏக்கருக்கும் குறைவாக தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறு குறு விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல், ஆதார், வங்கி பாஸ் புக் நகல்களை வேளாண்மை துறையினரிடம் ஒப்படைத்து, பிரதான் மந்திரி கிசான் விகாஸ் திட்டத்தில் தங்களை பயனாளிகளாக தேர்வு செய்து கொள்ளும் முறை இருந்து வந்தது.

தற்போது இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அனுமதித்திருப்பதால், அதிக அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருவது அம்பலமாகி இருக்கிறது. 

உங்கள் ஊரின் யாரெல்லாம் இதுபோல போலியான தகவல் கொடுத்து விண்ணப்பித்து பணம் பெற்று வருகின்றனர் அவர்களின் பெயர் பட்டியலை நீங்களாகவே உங்கள் மொபைலில் பார்க்கலாம் அது எப்படி என்று இந்த காணொளியில் பார்ப்போம்


முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை கிளிக் செய்யுங்கள் பின்பு ஒரு வெப்சைட் தோன்றும் இதில் கீழே வந்தால் பெனீபீஷியரி லிஸ்ட் அதாவது பயனாளர் நுழைவு அதை கிளிக் செய்யுங்கள் இதில் உங்களது மாநிலம் மாவட்டம் வட்டம் தாலுகா உங்கள் ஊர் இது அனைத்தும் செலக்ட் செய்யுங்கள் பின்பு என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள் இப்பொழுது திரையில் உங்கள் ஊரில் உள்ள pm-kisan பயனாளியின் பெயர்கள் தோன்றும் இதில் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கலாம் அல்லது விவசாயம் அல்லாத பிற நபர்கள் இதில் பணம் பெற்று பதிவு செய்திருக்கலாம் அவர்களை உங்களுக்கு நன்றாக அடையாளம் காண உங்கள் ஊரில் உள்ள மக்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருக்கும் அதை நீங்கள் சரிவர பார்த்தால் உங்களுக்கே தெரியும் யாருக்கு நிலம் இருக்கு யார் விவசாய வேலை செய்கிறாய் என்று அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்கும் அதை கொண்டு நீங்களாகவே ஒரு தீர்மானம் கொண்டு வரலாம் உங்கள் ஊரில் உள்ள ஒரு மேல் சந்தேகம் இருந்தால் யார் உடனடியாக உங்களது கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மாவட்ட வேளாண் துறையை அணுகுங்கள் அவர்கள் அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள் இது போன்ற விவரங்களை நீங்கள் உங்களுடைய மொபைல் மூலமாகவே அறிந்து கொள்ளலாம் இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் பயனுள்ளதாக இருந்தால் இந்த பேஜை லைக் செய்து பாலோ செய்யுங்கள் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து போல செய்யுங்கள் நன்றி

Post a Comment

Previous Post Next Post