PMFBY: விவசாயிகளுக்கு, பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை அறிவிப்பு- தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் விபரம்!
மாவட்ட விவசாயிகளுக்கு, பிரதான் மந்திரி தேசிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 2019ம் ஆண்டுக்கான ரபி சிறப்புப் பருவத்திற்கான இழப்பீடாக ரூ.67.83 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயிர் சேதம் கணக்கிடப்பட்டு, தற்போது பயிர் காப்பீடு இழப்புத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி நெல் சம்பா மற்றும் தாளவாடி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தினரால், ரபி பருவத்திற்கான இழப்பீடாக ரூ.67.83 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரைத் தொடர்பு கொள்ளலாம்?
பயிர் காப்பீடு தொடர்பான விபரங்களைப் பெற, அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்டெட், சென்னை அலுவலகத்
தொலைபேசி எண் 044- 43403401, மேலாளர் திரு.சூர்யநாராயணன்
கைபேசி எண் 9940326750,
வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுதா கைபேசி எண் 8610545630, மற்றும் வட்டார உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
எப்படித் தெரிந்துகொள்வது?
மேலும் பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட வருவாய் கிராம வாரியான இழப்பீடு தொகை சதவீத விபரம், தஞ்சாவூர் இணையதளம்
பதவிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்த்தும் தங்கள் பகுதிக்கான தொகையினை விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே மாதிரி உங்க கிட்ட உழவன் app இருந்தா அந்த app மூலமாக நீங்க செக் பண்ணி பார்த்துக்கலாம் அதை எப்படி செக் பண்றது என்று நம்ம YouTube channel வீடியோவில் தெளிவாக சொல்லி இருப்போம் அந்த வீடியோவில் இங்கே கொடுத்திருக்கேன் அந்த வீடியோ கிளிக் பண்ணி பாருங்க
Post a Comment