பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Loan)
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் விவசாயம் அல்லாத சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
நீங்கள் தொழில் முனைவோரா அல்லது சிறு தொழிலாளியா எதாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? அப்போது இந்த செய்தி உங்களுக்கு பலன் தரும்.
தற்போதைய கொரோனா காலாத்தில் பெரும்பாலானோர் வேலையின்றி தவித்து வருகின்றர். அவர்களுக்கு உதவும் நோக்கில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், விவசாயம் சாராத சிறு தொழிலாலர்களுக்கு SBI வங்கி 10,000 முதல் 10,00,000 வரை எளிய முறையில் கடனை பெற்றிட முடியும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்த திட்டத்தில் கீழ், தொழிலாளர்கள் கடன் பெற வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் வீட்டில் இருந்தே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
59 நொடிகளில் கடன் பெறலாம்
இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், வங்கி இணையத்திளத்தில் கேட்கப்படும் ஆவணங்களை நீங்கள் சரியாக பூர்த்திசெய்யும் பட்சத்தில் உங்களுக்கான கடன் வெறும் 59 நிமிடங்களில் அனுமதிக்கப்படும். இதனால் அலைச்சல் குறைக்கப்படுகறது.
வட்டி விகிதம்
இந்த திட்டத்தின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 8.5% ஆக தொடங்குகிறது.
mudra scheme
இந்த முத்ரா கடன் திட்டம் 3 வகைகளில் வழங்கப்படுகிறது.
சிசு (SHISHU) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை ஒருவர் கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெற முடியும்.
தருண் (TARUN) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக ஒருவர் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையில் கடன் வசதி பெற முடியும்.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் கடன் பெறலாம்?
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் எந்தவொரு இந்திய குடிமகனும் PMMY திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். உங்கள் தற்போதைய வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினாலும், அதற்கு பணம் தேவைப்பட்டாலும் , நீங்கள் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கடன் பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
கடன் வழங்கும் வங்கிகள்
27 பொதுத்துறை வங்கிகள்
17 தனியார் துறை வங்கிகள்
31 மண்டல கிராம வங்கிகள் (RRBs)
4 கூட்டுறவு வங்கிகள்
36 நுண் நிதி நிறுவனங்கள் (MFIs)
25 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)
அருகில் உள்ள வங்கிகளில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் விபரங்கள் அவசியம் நிரப்பப்பட வேண்டும்.
அடையாள சான்று (வாக்காளர் அட்டை,
ஓட்டுனர் உரிமம்,
பான் கார்டு,
ஆதார் அட்டை, (பாஸ்போர்ட்)
இருப்பிட சான்று (லேட்டஸ்ட் தொலைபேசி ரசிது,
மின்சார கட்டண ரசிது,
வீட்டு வரி ரசிது)
லேட்டஸ்ட் புகைப்படம்
இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது
சப்லேயர் விபரங்கள்
தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும்
லைசென்ஸ்
சாதி சான்று
மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதழ்களை பெறலாம். கடன் திருப்பி செலுத்தும் காலம் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கபட்டுள்ளது.
Post a Comment