சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டுவதற்கு ரூ.6ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (Prime Minister Krishi Sinchayee Yojana PMKSY)மூலம் இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரித்திருப்பதாவது:
சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டுவதற்கு ரூ.6ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (Prime Minister Krishi Sinchayee Yojana PMKSY)மூலம் இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரித்திருப்பதாவது:
வெள்ளிமலை ஒன்றியத்தில் மரவள்ளி, மஞ்சள், தக்காளி, வெங்காயம் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் அரசு வழங்குகிறது.
இதில், விவசாயிகளுக்கு கூடுதலாக குழாய்களை அமைக்க பள்ளம் எடுப்பதற்கு அதிகளவில் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது.
இதனையொட்டி குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் பள்ளம் எடுப்பதற்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.3,000 வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டர் அளவிற்கு ரூ.6,000 மானியம் வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
சிறு, குறு விவசாயி சான்றிதழ்
சிட்டா
அடங்கல்
நில வரைபடம்
புகைப்படம் 2
மேலும் சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அரசு மானியம் வாங்க தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும்.
எனவே, சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் பதிவின் போது தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment