எந்த மாவட்டம் தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, அசில் ரக கோழி வளர்ப்புக்கு 100 சதவீத மானியத்தில் குஞ்சுகள் வீதம் வழங்கப்பட உள்ளன.
பெண்களுக்கு வாய்ப்பு
பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ள இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தில் பதிவு பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விதிகள்
அந்தந்த கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
ஏற்கனவே, விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு அல்லது செம்மறியாடு மற்றும் கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள், இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.
விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
30 சதவீதம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியான ஏழைப் பெண் பயனாளிகள் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் இம்மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
Post a Comment