ரூ.50க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்  மருத்துவமனை - மத்திய அரசின் திட்டம்!



நம் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றோடு மருந்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது தற்போது கட்டாயமாகிவிட்டது. ஏனெனில் அந்த அளவுக்கு நோய்களும் நம்மில் வாழத் தொடங்கிவிட்டன.


வாட்டி வதைக்கும் கொடிய  நோய்களுக்கு உயர்தர சிகிச்சை என்பது ஏழை எளிய மக்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் எட்டாக்கனி. அவர்கள் மட்டுமல்ல, உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்படும் மக்கள் பலரும், லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாமல், தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். 


இதனைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP) என்றத் திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.
நவம்பர் 2016ல் இத்திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP)என மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்படி நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஜன் ஆயுஷ் எனப்படும் ஔஷத மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 202 மருந்தகங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


மலிவுக் கட்டண மருத்துவமனை (Low fees )


இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக மலிவு விலை மருத்துவமனைகளும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு வருகின்றன. இங்கு உயர்தர சிகிச்சைகளும் மலிவு விலையில் அளிக்கப்படுகின்றன.



திட்டத்தின் நோக்கம் (Target)


ஏழை எளிய மக்களுக்கும் சிறந்த மருந்துகள், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் உள் நாட்டில் மருந்து உற்பத்தி அதிகரிக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகளும் கிடைக்கும்.

ஜெனிரிக் மருந்து
நாடு முழுவதும் உள்ள ஜன் ஆயுஷ் கடைகளில் இந்த குறைந்த விலை ஜெனிரிக் எனப்படும் பிராண்ட் வகை (Brand) மருந்து வகைகள் கிடைக்கும்.

மக்கள் மருந்தகங்களைத் துவங்குவதற்கான தகுதிகள்

நீங்கள் தனிநபராக இருந்து, பின்வரும் தகுதிகளைப் பெற்றால் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகத்தைத் துவங்கலாம்.

1) நீங்கள் மருத்துவராக இருந்தால் (அல்லது)

2)பதிவு செய்யப்பட்ட மருத்துவத் தொழில்முறை வல்லுநராக இருப்பின் (அல்லது)

3) B.Pharma/D.Pharma பட்டங்களைப் பெற்றிருந்தால்

மேற்கண்ட தகுதிகளை நீங்கள் பெற்றிருக்கவில்லை எனில், B.Pharma/D.Pharma பட்டம் பெற்றிருப்பவர்களைப் பணியில் அமர்த்தி மருந்தகங்களைத் துவங்கலாம்.

மேலும், தனிநபர்கள் அரசு மருத்துவமனை வளாகங்களில் மருந்தகங்களைத் துவங்கவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது NGO மற்றும் அறக்கட்டளைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆரம்பிக்க என்ன தேவை? (Qualification)
சொந்தமாக ஒரு கடை அல்லது லீஸ் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு கடை.

கடையின் அளவு குறைந்தது 120 சதுர அடிகள் இருக்க வேண்டும்.

கணினி அறிவுடன் கூடிய மருந்தாளுனர் ஒருவரை வேலையில் சேர்த்ததற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

ஆரம்பிப்பவர் SC / ST பிரிவை சேர்ந்தவர் அல்லது மாற்று திறனாளியாக இருந்தால் அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட வேண்டும்.

சலுகைகள் 

மக்கள் மருந்தகங்களுக்கான ஏஜென்சியை நீங்கள் பெற்றால், மருந்தின் விலையில் 20% லாபமாக வழங்கப்படும்.

உங்களின் மருந்தகம், இணையதளம் வாயிலாக BPPI யின் மென்பொருளுடன் இணைந்திருந்தால் ரூ2.5லட்சம் வரை ஊக்கத்தொகை பெற நீங்கள் தகுதியுடையவர்கள். இது உங்கள் மாதாந்திர மொத்த விற்பனையில் 15% ( அதிகபட்சம் ரூ10,000 ) எனக் கணக்கிட்டு மாதாமாதம் வழங்கப்படும். இந்த அதிகபட்ச தொகை வடகிழக்கு மாநிலங்கள், நக்சல் பாதிப்புப் பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில் ரூ.15,000 ஆக இருக்கும்.


மலிவு விலை மருத்துவமனை (low cost Hospital)
இந்தத்திட்டத்தின்படி தமிழகத்தின் முதல் மலிவு கட்டண மருத்துவமனை, கோவையில் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில், இ.வி.எஸ். என்ற தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த மலிவு கட்டண மருத்துவமனை, கோவை சித்தாபுதுாரில் துவக்கப்பட்டுள்ளது

ரூ.50 மட்டுமே கட்டணம் (Only Rs.50)
இந்த இ.வி.எஸ் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர், பொது மருத்துவர், நரம்பியல் நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர், நீரிழிவு நோய் நிபுணர், மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறியல் மருத்துவர், மூட்டு மற்றும் இருதய நோய் நிபுணர் என.. சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.

மருத்துவக் கட்டணம் (Medical Bill)
நோயாளிகளுக்கான மருத்துவ கட்டணம், 50 ரூபாய் மட்டுமே.
காலை 8.30 முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரையில் நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்படும்.

ஸ்கேன் வசதி (Scan)
சலுகை கட்டணத்தில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே வசதிகளுக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனையில், 'ஜன் ஔஷாதி' எனும் பெயரில் மருந்தகமும் உள்ளது. இதில், பொதுவான அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

http://janaushadhi.gov.in/ என்ற இணைய முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

நேரிடையாகச் சமர்ப்பிக்க

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பின்னர் வழிகாட்டுதலின் படி பூர்த்திச் செய்த விண்ணப்பத்தைக் கீழே குறிப்பிட்ட முகவரி தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

The CEO,

Bureau of Pharma Public Sector Undertakings of India (BPPI),

IDPL Corporate Office,

IDPL Complex,

Old Delhi Gurgaon Road,

Dundahera,

Gurgaon - 122016 (Haryana)

கடிதத்தின் உறையில், முகவரிக்கு முன்னதாக

"Application For The New PMBJK" என்பதைக் கண்டிப்பாகத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.


Post a Comment

Previous Post Next Post