தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் (National Agriculture Development Programme) 5 ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்யாத தரிசு நிலத்தை, பயிர் சாகுபடிக்கு கொண்டு வரக்கூடிய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படும்
திட்டத்தின் நோக்கம்
இத்திட்டத்தின் கீழ் புதா்களை அகற்றுதல், நிலத்தை சமன் செய்தல் , உழவு மற்றும் விதைப்பு செய்தல், பயிா் பாதுகாப்பு போன்ற பணிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும், விதைகள்,உயிா் உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் ஆகியவை வேளாண் விரிவாக்க மையம் மூலம் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக இரண்டு ஹெக்டோ் வரை மானியம் வழங்கப்படும்.
மானிய விவரம்
இத்திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி எண்ணெய் வித்து பயிா்கள் சாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம், பயறு வகை பயிா் சாகுபடிக்கு ரூ.9,250 வீதம் 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தரிசு நிலமாக இருந்தற்கான சான்றிதழை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கி பயன் பெறலாம்.
அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரப்பகுதியில், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட காடமங்கலம், பொந்தம்புளி, நீராவி, கள்ளிக்குளம், செங்கப்படை, நகரத்தாற்குறிச்சி வருவாய் கிராமங்களில் 70 ஹெக்டேர் தரிசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
இத்திட்டத்தின் ஒருபகுதியாக காடமங்கலம் வருவாய் கிராமத்தில் தரிசாக உள்ள கருவேல மரங்களை அகற்றி பயிர் சாகுபடிக்கு கொண்டு வரும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன் கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர் சாகுபடிக்கும் செலவின தொகைக்கு ஏற்ப மானியமும் வழங்கப்பட உள்ளது
எனவே, விவசாயிகள் உரிய சான்றுகளுடன் வேளாண் உதவி அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment