பொருளதாராத்தில் நலிவடைந்தவர்கள் என கவுரமாகச் சொல்லப்பட்டாலும், வறுமை, என்ற வார்த்தைதான் இன்னும் பலரது நிரந்தர விலாசமாக இருக்கிறது. மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு , உடை , உறைவிடம் ஆகிய மூன்றையும் பெறுவது என்பது இவர்களுக்கு எட்டாத இலக்கு.
இருப்பினும் விடியல் என்றாவது வரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும், இத்தகைய பாமர மக்களின் நிலையை உயர்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, வறுமையில் சிக்கியுள்ள குடும்பத்தின் வருமானத்தைக் கூட்டும் வகையில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே PM Free Silai Machine Yojana திட்டம்.
மாதம் ஆயிரம் ரூபாயை மட்டுமே வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்தவேண்டியக் கட்டாயத்தில் தவிக்கும் பெண்களா நீங்கள்?
வேறு ஏதேனும் தொழில் செய்து குடும்பத்திற்கும், கணவனுக்கும் உதவ வேண்டும் என்று நினைப்பவரா? அப்படியானால் இந்தத்திட்டம் உங்களுக்குதான். நீங்கள் இந்தத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்
திட்டத்தின் நோக்கம் (Scheme Concept)
குடும்பத்தின் வருமானத்தை ஈட்டுவதுடன், பெண்களுக்கு சுயதொழில் செய்யும் பக்குவத்தை அளித்து, சம்பாதிக்க ஊக்கம் அளிப்பதும், ஏழை விவசாயக் குடும்பத்தின் 2வது வருமானத்திற்கு வழிவகுப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
திட்டத்தின் பயன் (Scheme Benefit)
இந்த திட்டத்தின்படி கிராமப்புற மற்றும் நகர்புறங்களைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு வீட்டில் இருந்தே சுயதொழில் செய்து கணவருக்கு பொருளாதார ரீதியில் உதவலாம்.
50,000 பெண்கள் இலக்கு
PM Free Silai Machine Yojana திட்டத்தின்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், தகுதிவாய்ந்த 50 ஆயிரம் பெண்களைத் தேர்வு செய்து விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் நிலை மேம்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.
தகுதி
20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி பெற்றவர்கள்.
அந்த பெண்ணின் கணவனின் ஆண்டு வருமானம் ரூ.12,000த்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இதைத் தவிர பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
கணவனை இழந்த விதவைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறமுடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விலையில்லா தையல் இந்திரம் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள், https://www.india.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
ஆதார் அட்டை,
பள்ளி சான்றிதழ் (வயதைத் தெரிந்துகொள்ள)
வருமான சான்றிதழ்
அடையாள அட்டை
Post a Comment