இலவச கறவை பசுமாடுகள் வழங்கும் திட்டம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள் வழி முறைகள்
உங்கள் ஊரில் ஆடு மாடு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் இலவச கறவை பசுக்கள் வழங்க படுகின்றன அதனை உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவமனை சென்று தேவையான ஆவணங்கள் மற்றும் application பூர்த்தி செய்து கொடுத்து பயன் பெறுங்கள்
இந்த திட்டத்தில் பயனாளிகள் யார்?
இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தின் முக்கியப் பயனாளி மகளிராக இருக்க வேண்டும்.
திருநங்கை இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தில், குடும்ப பொறுப்பை கவனித்து வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விதவைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், ஊனமுற்ற பெண்கள் ஆகியோருக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
பயனாளியின் வயது 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பயனாளியின் பெயரிலோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது.
பசுவுக்கு தேவையான பசுந்தீவனத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் கொஞ்சமாக நிலம் இருந்தால் பரவாயில்லை.
தற்போது சொந்தமாக பசுக்களோ அல்லது எருமை மாடுகளோ இருக்கக்கூடாது.
பயனாளியோ அல்லது அவரது வாழ்க்கை துணையோ, தந்தை, தாய், மாமனார், மாமியார், மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோரில் ஒருவர்கூட மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவராக இருக்கக்கூடாது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் எதிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.
இலவச கறவை மாடு பெறும் பயனாளிக்கு, இலவச ஆடு வழங்கப்படமாட்டாது.
பயனாளிக்கு கிராம பஞ்சாயத்தில் நிரந்தர வீடு இருக்க வேண்டும்.
பயனாளிகளில் 29 சதவீதம் ஆதிதிராவிடர் சமூககத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு சதவீதம் பேர் பழங்குடியின மக்களாகவும் இருக்க வேண்டும்.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் இருந்து கறவை மாடுகள் கொள்முதல் செய்யப்படும்.
கறவை மாடு பெறும் பயனாளியிடம் இருந்து, கறவை மாட்டை குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு விற்கமாட்டேன் என்று உறுதிமொழி பெறப்படும்.
Application download செய்ய சிறிது நேரம் காத்திருங்கள் Download option தோன்றும்
Application download link
Download Timer
Post a Comment