இந்த விண்ணப்பப் படிவத்தை உங்கள் ஊரில் நடக்கும் கிராம சபையில் வாங்கிக்கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இந்த அப்ளிகேஷன் கிடைக்கும் எங்கும் கிடைக்கவில்லை என்றால் இந்தப் பதிவில் அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அதற்கான லிங்க் கீழே கொடுத்துள்ளேன் அந்த லிங்கை 20 செகண்ட் காத்திருந்து டவுன்லோட் ஆப்சன் வரும் அதை கிளிக் செய்தால் உங்களது அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்
தர்மம் செய்த அப்ளிகேஷனை பெயர் முகவரி ஆதார் அட்டை எண் மொபைல் நம்பர் சாதி மற்றும் உங்களது அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்து விடும் கொடுத்து உங்களுக்கு நிலம் இருக்கா இல்லை என்ற சான்று பெற்று உங்களது கிராம சபையில் திரும்ப இந்த விண்ணப்பத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் தேவையான ஆவணங்கள் அனைத்தும் இணைத்து கொடுத்து விட்டால் உங்களது விண்ணப்பம் பரிசீலனை செய்து உங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வார்கள் அந்த நிதியின் பெயரில் உங்களுக்கான ஆடு அல்லது மாடு உங்களுக்கு வழங்குவார்கள் உங்கள் பகுதியில் இது திட்டம் அமல் இருக்கிறதோ அந்தத் திட்டம் உங்களுக்கு கிடைக்கும் இதற்கு பயனாளிகள் யார் விவரம் அறிய தொடர்ந்து படியுங்கள்
பயனாளிகள் யார்?
இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தின் முக்கியப் பயனாளி மகளிராக இருக்க வேண்டும்.
திருநங்கை இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தில், குடும்ப பொறுப்பை கவனித்து வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விதவைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், ஊனமுற்ற பெண்கள் ஆகியோருக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
பயனாளியின் வயது 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பயனாளியின் பெயரிலோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது.
பசுவுக்கு தேவையான பசுந்தீவனத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் கொஞ்சமாக நிலம் இருந்தால் பரவாயில்லை.
தற்போது சொந்தமாக பசுக்களோ அல்லது எருமை மாடுகளோ இருக்கக்கூடாது.
பயனாளியோ அல்லது அவரது வாழ்க்கை துணையோ, தந்தை, தாய், மாமனார், மாமியார், மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோரில் ஒருவர்கூட மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவராக இருக்கக்கூடாது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் எதிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.
இலவச கறவை மாடு பெறும் பயனாளிக்கு, இலவச ஆடு வழங்கப்படமாட்டாது.
பயனாளிக்கு கிராம பஞ்சாயத்தில் நிரந்தர வீடு இருக்க வேண்டும்.
பயனாளிகளில் 29 சதவீதம் ஆதிதிராவிடர் சமூககத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு சதவீதம் பேர் பழங்குடியின மக்களாகவும் இருக்க வேண்டும்.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் இருந்து கறவை மாடுகள் கொள்முதல் செய்யப்படும்.
கறவை மாடு பெறும் பயனாளியிடம் இருந்து, கறவை மாட்டை குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு விற்கமாட்டேன் என்று உறுதிமொழி பெறப்படும்.
இலவச ஆடுகள்...
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் (வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு) இலவசமாக வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில், கிராமப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும்.
இந்த ஆண்டு கோடி கணக்கில் செலவில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்படுகின்றன. இந்த தொகையைக் கொண்டு விவசாயப் பண்ணையை பலப்படுத்த ரூ.5 கோடியும், ஆடுகள் கொள்முதல் செய்ய ரூ.120 கோடியும், காப்பீடு, போக்குவரத்து செலவுக்காக ரூ.5 கோடியும், சில்லறை செலவுகளுக்காக ரூ.5 கோடியும் ஒதுக்கப்படுவது வழக்கம்
இலவச ஆடுகள் பெறுவோர் மகளிராக இருக்க வேண்டும்.
அவருக்கு நிலமில்லாத விவசாய கூலியாக இருக்க வேண்டும்.
அதற்கான சான்றிதழை வி.ஏ.ஓ.விடம் வாங்கித் தர வேண்டும்.
பயனாளியின் வீட்டில் ஆடு மேய்க்க வசதியாக 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டோர் இருத்தல் அவசியம்.
கறவை மாடு பெறுவோர் இலவச ஆடுகளை பெற முடியாது.
ஆடுகளை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு விற்கமாட்டேன் என்று பயனாளியிடம் உறுதிமொழி பெறப்படும்.
மற்றபடி கறவை மாடுகள் வழங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் ஆடுகள் வழங்குவதிலும் பின்பற்றப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை நகல்
2.ரேஷன் கார்டு
3. வங்கி கணக்கு புத்தகம்
4. நூறுநாள் வேலை திட்ட கார்டு எண்
5. விதவை, ஊனமுற்றோர், திருநங்கை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் CERTIFICATE தேவை
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அணுகி நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய 20 sec காத்திருங்கள் கீழே டவுன்லோட் ஆப்சன் வரும் அதை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Download Timer
Post a Comment