விவசாயிகள் பயிர் மற்றும் இடுபொருட்களை வாங்குதல் போன்ற, தங்களுடையப் பொருளதாரத் தேவைகளை எதிர்கொள்ள உதவும் வகையில், மத்திய- மாநில அரசுகளும் சில வங்கிகளும், பல்வேறு கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
இலக்கு (Target)
விவசாயிகள் எவ்வித சிரமம் இன்றி வங்கிக்கடன் பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டங்களின் இலக்கு.
7 கோடி பேர் (7 Crore)
இதன் ஒருபகுதியாக பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana) திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும், கிசான் கடன் அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின் வெற்றியாக, தற்போது நம் நாட்டில் உள்ள விவசாயிகளில் 7 கோடி பேர் கிசான் கடன் அட்டையை வாங்கிப் பயன்படுத்திப் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தில் வாங்கும் விவசாயக் கடனுக்கு 4 சதவீதம் மட்டுமே வட்டி.இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி (SBI) விவசாயிகளுக்கான சிறப்பு பயிர்க் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
எஸ்பிஐ ஸ்பெஷல் பயிர்க்கடன் (SBI Special Crop Loan)
இந்த சிறப்புப் பயிர்க்கடன், எஸ்பிஐ கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் எளிமையான முறையில் கடன் பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது. அதாவது பயிர் சாகுபடி, அதற்கு முந்தைய அறுவடைப்பணிகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது.
எஸ்பிஐ பயிர்க்கடனை கிசான் கடன் அட்டை மூலம் பெறுவது எப்படி? என்பது தொடர்பான விபரங்களை https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan/kisan-credit-card என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.
கிசான் கடன் அட்டை (Kisan Credit Card)
கிசான் கடன் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்கள், நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள், நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடன் வழங்கப்படும்.
4 சதவீத வட்டி (4% Interest)
கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து 9 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் 2 சதவீதம் அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வட்டி 7 சதவீதமாகிறது.இதில் வாங்கியக் கடனை ஓராண்டிற்குள் செலுத்தும் விவசாயிக்கு, வட்டியில் மேலும் 3 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகிறது.
பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் பயன் (PM yojana Scheme)
ஆவண உத்திரவாதம் இன்றி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கடன்.
முதல் ஓராண்டிற்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை 7 சதவீத வட்டி.
ரூ.3 லட்சம் வரை 2 சதவீத வட்டி மானியம் பெற முடியும்.
ஓராண்டிற்குள் பணத்தை திரும்பச் செலுத்தும்போது, மேலும் 3 சதவீத வட்டி மானியம்.
கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ், விவசாய நிலத்திற்கும், பயிருக்கும் காப்பீடு
தகுதியுடையவர்கள் (Qualify)
அனைத்து விவசாயிகள், நிலக்குத்தகைதாரர்கள், நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள் மற்றும் பயிர் சாகுபடி பங்குதாரர்கள்
விவசாயம் செய்யும் சுயஉதவிக் குழுக்கள்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
விண்ணப்பப் படிவம்
அடையாள மற்றும் முகவரிச்சான்று
இதில் வாக்காளர் அடையாள அட்டை,
பான் அட்டை,
பாஸ்போர்ட்,
ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
எஸ்பிஐ கிசான் கடன் அட்டை (SBI kisan Credit Card)
மொபைலில் எஸ்பிஐயின் யூனோ ஆப்-பில் சென்று, கிசான் கடன் அட்டையில் உள்ள கையிருப்புத் தொகையைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், வாடிக்கையாளர் சேவை அதிகாரியைத் தொடர்பு கொண்டும் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர் சேவை அதிகாரியைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றால், 1800112211, 18004253800 மற்றும் 080-26599990 கட்டணமில்லா சேவை எண்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிசான் கிரெடிட் கார்டு APPLICATIIN DOWNLOAD
Post a Comment