இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆதார் பி.வி.சி கார்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஆர்டர் செய்யும் போது, ​​ஒரு நபருக்கு ₹ 50 வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை எவ்வாறு ஆன்லைன் வாயிலாக பெறுவது என்பதை பார்க்கலாம் வாங்க…

ஆதார் பி.வி.சி கார்டு:

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து விதமான அரசுத்துறை செயல்பாடுகளுக்கும் முக்கியமானதாக கருதப்படும் ஆதார் கார்டு இப்போது முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. இதன் மூலம் பழைய ஆதார் கார்டிற்கு பதிலாக பாலிவினைல் குளோரைடு (பிவிசி) கார்டாக மறுபதிப்பு செய்து கொள்ளலாம்

எனவே, இப்போது உங்கள் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகளைப் போன்று உங்கள் பர்சில் ஆதார் அட்டையையும் எடுத்துச் செல்ல முடியும். UIDAI கூறுகையில் “சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களுடன் இது உருவாக்கப்பட்டு உள்ளது. அதிக நீடிப்புத் தன்மை மற்றும் வெளியில் எடுத்துச் செல்ல வசதியானது என்று தெரிவித்துள்ளது.

ஆதார் பி.வி.சி கார்டின் பாதுகாப்பு அம்சங்கள்:
1) சிறந்த அச்சிடும் தரம் மற்றும் லேமினேஷன்

2) ஆதார் பி.வி.சி அட்டை அதிக நீடிப்புத் தன்மை மற்றும் வெளியில் எடுத்துச் செல்ல வசதியானது

3) அனைத்து புதிய ஆதார் பி.வி.சி அட்டையிலும் சமீபத்திய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஹாலோகிராம், நவீன பேட்டர்ன், இமேஜ் & மைக்ரோடெஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது.

4) ஆதார் பி.வி.சி அட்டை மழையில் நனைந்தாலும் எவ்வித சேதமும் அடையாது.

5) அதிலுள்ள QR கோர்டின் மூலம் உடனடியாக விபரங்களை ஆஃப்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

6) இந்த அட்டையில் வெளியீட்டு தேதி & அச்சிடப்பட்ட தேதி போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும்.

தங்களது ஆதார் கார்டில் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணை தற்போது வைத்திருக்காத பயர்னர்களும் இந்த புதிய கார்டை வேறு ஒரு மொபைல் எண்ணை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் பி.வி.சி கார்டை பெறுவது எப்படி??
www.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் புதிய ஆதார் பி.வி.சி கார்டை பதிவு செய்யலாம். ‘எனது ஆதார்’ என்ற ஆப்சனின் கீழ், ‘ஆதார் சரிபார்ப்பு பி.வி.சி கார்டு நிலை’ என்பதை கிளிக் செய்து, 28 இலக்க எஸ்ஆர்என், 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா (CAPTCHA) குறியீட்டை உள்ளிட வேண்டும்

இதன் பின்னர் உங்களுக்கான புதிய ஆதார் பி.வி.சி கார்டு பதிவு செய்யப்படும். இது அடுத்த 5 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் வந்து சேரும். இதற்காக ஒரு நபருக்கு தலா 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் என UIDAI தெரிவித்துள்ளது

Post a Comment

Previous Post Next Post