கொரோனா சூழல்:
கொரோனா கால பொது முட்டாகத்தால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees’ Provident Fund Organisation) வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் புகார்கள், உதவிகள் அல்லது எதை பற்றியெனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதனை குறிப்பிட்ட வாட்ஸ்அப் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு அம்சமாக வாட்ஸ்அப் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக சந்தாதாரர்கள் நேரடியாக தங்களது பிரச்சனைகளை எளிய முறையில் தீர்த்து கொள்ளலாம் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி நிறுவனத்தில் தற்சமயம் 138 மண்டல அலுவலகங்கள் உள்ளன. அனைத்து மையங்களிலும் வாட்ஸ்அப் உதவி மையம் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
ஒவ்வொரு மையத்திற்கு தனி தனி வாட்ஸ்அப் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தகவல்களை பெற வேண்டுமென்றாலும் குறிப்பிட்ட அந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் மையத்தில் பணிபுரிபவர்கள் அதற்கான விளக்கத்தை அளிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக பட்டியல்:
மண்டல வாரியாக வாட்ஸ்அப் எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமாக புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டதாக அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மண்டல மையங்கள் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் இந்த திட்டத்தினை வரவேற்று உள்ளனர்.மண்டல வாரியாக அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப்எண் விவரம்:
மண்டல வாரியான வாட்ஸ்அப் எண் பட்டியல்
http://www.epfindia.nic.in/site_docs/PDFs/Downloads_PDFs/WhatsApp_Helpline.pdf
Post a Comment