கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை வரை அடகு வைத்த கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது. இதனால் விவசாயிகளின் கடந்த பொங்கல் தினத்தில் விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் பணம் கொடுத்த தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிளில் பயிர்கடன் வாங்கிய 16.43 லட்சம் விவசாயிகளின் 12110 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்வதாக முதல் அறிவித்துள்ளார். ஆனால்இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன்வரை நகைக்கடன் பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக இன்று அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,தற்போது நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 15 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இக்குழுக்களில் உள்ள அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்
Post a Comment