தமிழக சட்டசபையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்களையும், விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்
விபத்து, ஆயுள் காப்பீட்டு திட்டம் எல்.ஐ.சி. (LIC), யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து துவக்கம்
குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு (Insurance) வழங்கப்படும்
நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாம் வழங்கப்படும்.
சட்டம் ஒழுங்கிற்கு ரூ.9567 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
சமூக நலத்துறைக்கு (Public welfare department) ரூ.1953 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பயிர்க்கடன் தள்ளுபடி (Crop Loan discount) திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு.
காவல் துறையை (Police department) நவீனப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவியல் (Computer science) பாடம் அறிமுகப்படுத்தப்படும்
கோவை மெட்ரோ ரெயில் (Covai Metro Rail) திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறப்பால் 4.1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும்.
கால்நடைகளுக்காக அம்மா அவசர வாகன சேவை (Amma Emergency Vehicle Service) தொடங்கப்பட்டுள்ளது
மினி கிளினிக்கிற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (export) செய்ய ஊக்குவிப்பு
மீன்பிடி துறைமுகங்கள்,
இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு
சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு அவினாசி திட்டம் விரைவில் நிறைவு பெறும்
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் மார்ச் 2022ல் நிறைவு பெறும்.
இயற்கை பேரிடர் காலங்களில் சேதமடையும் பயிர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment