இனிமே இதுக்கு ஆன்-லைன் அப்ளிகேஷன் மட்டும்தான்!!

வீடுகளுக்கான மின் இணைப்பை பெறுவதற்கு பொதுமக்கள் இனி ஆன்-லைனில் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


samayam-tamil
   
வீடுகளுக்கான மின் இணைப்பை பெறுவதற்கு, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக சென்று புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பிப்பதுடன், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வசதி, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.


இதன் மூலம், மின் இணைப்புக்காக விண்ணப்பதாரர்கள் அலைகழிக்கப்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆன்-லைன் விண்ணப்பித்தல் முறைக்கு பொதுமக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மின்சார வாரிிய நிர்வாகம், பொதுமக்களை ஆன்-லைன் முறைக்கு பழக்கப்படுத்தும் நோக்கத்துடன் மின்வாரியம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆவண நகல்களை ஸ்கேன் செய்து www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஆன் -லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post