இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும் முழு விவரம்
விவசாய வருமானம் இல்லாத காலங்களில், விவசாயிகள் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்காக, கிராமப்புறங்களில், ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகின்றனர். இதன்மூலம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.
இதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அப்படியொரு திட்டம் தான் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம்.
இத்திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஊரக வேலைவாய்ப்பு ஊறுதித் திட்ட அட்டை (JOB CARD) வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பயன் பெற யாரை அணுக வேண்டும்
உங்கள் ஊரில் உள்ள சுயஉதவிக் குழுக்களையோ, பஞ்சாயத்து கிளார்க், கால்நடை மருத்துவரையோ அல்லது நேரடியாகத் திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ (Scheme BDO)ஆவின் பால் சங்கத்தையோ விவசாயிகள் அல்லது மாடு வளர்க்க விரும்புவோர் அணுக வேண்டும்.
கொட்டகை வகைகள் (Shed varieties)
இரண்டு மாடு கொண்ட கொட்டகை 98 ஆயிரம் ரூபாய் செலவிலும், 3 மாடுகளைக் கொண்ட கொட்டகை 1,20,000ரூபாய் செலிவிலும் அமைத்துத்ததரப்படுகிறது.
இதுபோல் கொட்டகை அமைக்க அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
தகுதி
1.ஏற்கனவே மாடு வளர்த்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2.ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை அறிக்கப்படும்.
3.இதைத்தவிர மாடு வளர்க்க ஆசைப்படும் அனைவருமே விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
1.சொந்தமாக நிலம் வேண்டும்
2.JOB CARD இருக்க வேண்டும்.
3.ஆதார் அட்டை
4.வாக்காளர் அடையாள அட்டை
5.கம்ப்யூட்டர் சிட்டா
ஆண்டுதோறும் ஏராளமானோர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகள் தவறாமல் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பயனடையலாம்.
Post a Comment