பசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி..! Pashu Kisan Credit Card Scheme 2020..!
பசு கிசான் கடன் அட்டை திட்டத்தின் சிறப்பு:
கால்நடை வளர்ப்பவர்கள் வங்கிகளில் எந்த வித அடமானமும் இல்லாமல் கால்நடை உழவர்கள் குறைந்த வட்டியில் ரூ. 1.60 லட்சம் வரை கடனுதவி பெற இந்த பசு கிசான் அட்டை மிகவும் உதவுகிறது.
திட்டத்தின் நோக்கம்:
இப்போது இருக்கின்ற விவசாய துறைகளில் அதிகமாக வளர்ந்து வருவது இந்த கால்நடை வளர்ப்பாகும். விவசாயிகள் அனைவரும் அதிக வருமானம் பெறுவதற்காக கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்காகவே இந்த பசு கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டம் 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
வங்கி கடன்:
இந்த பசு கிசான் கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதத்தில் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு பசு கடன் அட்டை மூலம் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
மானியம்:
வங்கியில் வாங்கிய கடன் தொகையினை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசானது 3% வட்டியை மானியமாக வழங்குகிறது.
மத்திய அரசு வழங்கும் மானியத்தால் விவசாய பண்ணையாளர்களுக்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 4% மட்டுமே.
உழவர் கடன் அட்டை சிறப்பு:
கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கியில் ஆண்டுக்கு ஒருமுறை 3 லட்சம் வரை கடனுதவி பெறலாம்.
பசு கிசான் அட்டை விண்ணப்பிப்பது எப்படி:
கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் அல்லது நீங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கடன் அட்டையை பூர்த்தி செய்து அந்த விண்ணப்ப படிவத்துடன் சேர்க்கவேண்டியது நில ஆவணம், ஆதார் அட்டை, புகைப்படம் வழங்க வேண்டும்.
கடன் ஒப்புதல் அளித்த பிறகு கால்நடை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு முதலில் 2 எருமை மாடுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும். கடனுதவி வழங்கிய பிறகு இதனுடன் கடன் அட்டையும் வழங்கப்படும்.
இந்த பசு கிசான் கடன் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு எருமை மாடு, பசு மாடு, ஆடு போன்ற கால்நடைகளை வாங்க வங்கிகளில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. பண்ணை வைத்து வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசு இந்த பசு கிசான் திட்டம் மூலம் இந்த உதவியை வழங்கி வருகிறது.
பசு கிசான் கால்நடை காப்பீட்டு திட்டம்:
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் பல இயற்கை சீற்றத்தால் கால்நடையானது இறப்பதற்கு வாய்ப்பு நேரிடும். இதனால் கால்நடை உரிமையாளர்களுக்கு பண இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதனை மையமாக கொண்டு விவசாயிகளுக்காக கால்நடை காப்பீட்டு திட்டத்தை மத்திய மாநில அரசு வழங்கி வருகிறது.
அரசு வழங்கும் மானிய சதவிகிதம்:
வறுமை கோட்டிற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% மானியமும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் விவசாயிகளுக்கு 70% மானியமும் காப்பீட்டு திட்டமாக மத்திய மாநில அரசு வழங்கி வருகிறது.
கால்நடை இறப்பு:
காப்பீட்டு திட்டம் மூலம் வழங்கிய கால்நடைகள் இறந்து போனால் காப்பீட்டு நிறுவனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
காப்பீட்டு திட்ட வயது:
கால்நடைக்கு 2 1/2 வயது முதல் 8 வயது வரை உள்ள பசுக்கள் மற்றும் எருமை மாடுகளுக்கு இந்த காப்பீடு செய்யலாம்.
அடுத்து 1 வயது முதல் 3 வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் போன்ற கால்நடைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யலாம்.
காப்பீடு வழங்கும் மானியம்:
அதிகபட்ச ரூ. 35,000/- மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்வதற்கு அரசு மானியம் வழங்குகிறது. ஓராண்டிற்கு காப்பீடு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 2% நிர்ணயம் செய்யப்படுகிறது.
அடுத்து ரூ. 35,000/- மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடை மதிப்புக்கான கட்டணங்களை கால்நடை உரிமையாளர் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்ச 5 கால்நடைகளை வைத்து இந்த பசு கிசான் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.
கிசான் கிரெடிட் கார்டு APPLICATIIN DOWNLOAD LINK
பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க
Post a Comment