வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம்
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை அமைத்திட ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்
வேளாண் இயந்திரங்கள் வாங்கிக் கொள்ள இந்த ஆண்டு ரூ.1.94 கோடியும், 2 வாடகை மையங்கள் அமைக்க ரூ.
20 லட்சமும் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும்
யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்
விவசாயிகள், கிராமப்புற இளைஞா்கள் (தொழில் முனைவோா் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், ஊராட்சி குழுக்கள் போன்றோா் வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள்
மானியம் எவ்வளவு கிடைக்கும்
ரூ. 25 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க 40 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் பிடித்தம் செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இரண்டு வருடங்களுக்கு பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சரிபாா்த்த பிறகு மானிய இருப்புத் தொகை மீண்டும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
விவசாயிகளுக்கு மானியம்
பயிா் செய்தலுக்கு ஏதுவாக டிராக்டா்கள், நெல் நாற்று நடவு இயந்திரங்களுக்கு தலா ரூ. 5 லட்சம், வைக்கோல் கட்டும் இயந்திரம் ரூ. 9 லட்சம், பல்வகை கதிரடிக்கும் இயந்திரம் ரூ. 2.50 லட்சம், சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை, சுழல் கலப்பைகளுக்கு ரூ. 50 ஆயிரம், விதைப்புக் கருவி ரூ. 78 ஆயிரம், களையெடுக்கும் கருவி ரூ. 63 ஆயிரம், பவா் டில்லா் ரூ. 85 ஆயிரம், அறுவடை இயந்திரங்கள் ரூ. 11 லட்சம், தென்னை ஓலைகளைத் துகளாக்கும் கருவி ரூ. 63 ஆயிரம், வைக்கோல் கூட்டும் கருவி ரூ. 1.50 லட்சம், புதா் அகற்றும் கருவி ரூ. 40 ஆயிரம், தட்டை வெட்டும் கருவி ரூ. 28 ஆயிரம், நிலக்கடலைத் தோண்டும் கருவி ரூ. 75 ஆயிரம், கரும்பு சோகை துகளாக்கும் கருவி ரூ. 1.25 லட்சம் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
கரும்பு சாகுபடி இயந்திர வாடகை மையம்
கரும்பு சாகுபடிக்கு பயன்படும் வேளாண் இயந்திரங்கள் மையம் அமைக்க ரூ.1.5 கோடி மதிப்பிற்கு 40 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை) மானிய உதவி வழங்கப்பட்டு, கரும்பு விவசாயிகளுக்கு இயந்திரங்கள் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.
வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற முதலில் உழவன் செயலியில் (Uzhavan app) பதிவு செய்ய வேண்டும். பின்னா் விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான 'www.agrimachinery.nic.in"- ல் இணைக்கப்படும்.
இவ்வாண்டிற்கென விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் வாங்க இயலும்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும்.ஆய்வுகள் அனைத்தும் முடிந்த 10 நாள்களுக்குள் விவசாயியின் வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டார வாரியான இலக்கு 'www.agrimachinery.nic.in"இணையதளத்தில் வெளியிடப்படும். முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்று ஏற்கனவே இரண்டு வீடியோக்கள் போட்டு உள்ளோம் அதைப் பார்த்து உங்களுக்கு தேவையான கருவிகளை விண்ணப்பித்து பயன் பெறலாம்
Post a Comment