ரூ.1,02,065 கோடி சலுகை கடன் விவசாயிகளுக்கு - மத்திய அரசு அறிவிப்பு
1.22 கோடி கிசான் கிரெடிட் கார்டுகள் சிறப்பு நிறை செறிவு இயக்கத்தின் கீழ் ரூ. 1,02,065 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியிலிருந்து விவசாயத் துறையைத் காப்பாற்றும் முயற்சியாக, விவசாயி கடன் அட்டை (KCC) மூலம் விவசாயிகளுக்கு சலுகை கடன் வழங்க சிறப்பு நிறை செறிவு இயக்கம் நடந்து வருகிறது. 17.08.2020 நிலவரப்படி, 1.22 கோடி KCC- களுக்கு (கிசான் கிரெடிட் கார்டு) கடன் வரம்பு ரூ. 1,02,065 கோடி வழங்கப்பட்டது. கிராமப்புறப் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதுடன், விவசாய வளர்ச்சியைத் துரிதப்படுத்த மேலும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
சுயசார்பு இந்தியா தொகுப்பின் (Aatma Nirbhar Bharat Package) ஒரு பகுதியாக, ரூ. 2 லட்சம் கோடி சலுகைக் கடன் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம், இது மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகள் உட்பட 2.5 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கி மூலம் விண்ணப்பிக்கும் முறை?
எஸ்பிஐ (SBI), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பிஎன்பி (PNB), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) உள்ளிட்ட எந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு உள்ளதோ அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்
அதில் Apply for KCC என்பது குறித்து தேடுங்கள், பின் அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.
கிசான் கடன் அட்டை (KCC)படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யுங்கள்.
பூர்த்தி செய்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, அருகிலுள்ள வங்கியின் கிளைக்குச் சென்று சமர்ப்பிக்கவும்.
கடன் அட்டை வழங்கும் அதிகாரி உங்கள் படிவத்தை மதிப்பாய்வு செய்து அவர் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றவும். கடன் அட்டை ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கிசான் கிரெடிட் கார்டு உங்கள் இல்லம் தேடி வரும் பெற்றுக்கொள்ளுங்கள்.
Post a Comment