மீன் வளர்போருக்கு மானியம் விண்ணப்பிக்கலாம் எப்படி?
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளர்போருக்கு 50 சதவீத மானித்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர், திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மீன் வளர்போருக்கு மானியம்
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகரித்திடவும், மீன் வளர்போரை ஊக்கப்படுத்திடவும், மாவட்ட மீன் வளர்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்கள் அமைத்த மீன் குளத்திற்கான மீன்குஞ்சு, தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
திட்டத்திற்கான நிபந்தனைகள்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மீனவர்கள் மாவட்ட மீன் வளர்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருந்து, மீன் பண்ணையினை முகமையில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், 2012-13-ம் ஆண்டில் இருந்து 2015-16-ம் ஆண்டு முடிய உள்ள கால கட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைத்து அரசு நிவாரணம் ஏதும் பெறாதவர்களும் கடந்த 5 ஆண்டுகளில் மீன் குளம் அமைத்து மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மூலம் நிவாரணம் பெற தகுதியானவர்கள் என என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அமைச்சகம் மீன்வளத் துறை சார்ந்த விவசாயிகளுக்கு உள்ளீட்டு மூலதனத்திற்கான நிதியுதவி வழங்கிட ஏதுவாக வங்கியின் மூலமாக கடன் உதவி பெற்றிட விவசாய கடன் அட்டை (Kisan credit card) வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக மீன்பண்ணை மற்றும் குளங்கள் வைத்திருப்போர், பொதுப்பணித்துறை, ஊராட்சி நீர் நிலைகளை குத்தகை எடுத்து மீன்வளர்ப்பு பணி மேற்கொள்பவர்கள், மீன்குஞ்சு பொறிப்பகம், மீன் வளர்ப்பு பண்ணைகள், மீன் விதைப்பண்ணைகள், மீன் விற்பனை செய்வோர், வண்ண மீன் வளா்ப்போர், மீன் பதனிடும் தொழில் புரிவோர் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் மீன் வளர்ப்போருக்கு உள்ளீட்டு மூலதனமாக மீன் குஞ்சுகள், மீன் உணவு, இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், மீன் அறுவடை, விற்பனை செய்தல், குத்தகைஎ தொகை போன்றவற்றுக்கு கடன் பெறலாம்.
பயன்பெற யாரை அணுகவேண்டும்?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான பயனாளிகள் திருநெல்வேலி மீன்வள துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக நாள்களில் அணுகலாம் .
கூடுதல் விவரங்கள் பெற்றிட உதவி இயக்குநர், மீன்வள துறை, 42 சி, 26வது குறுக்குத் தெரு, மகாராஜ நகர், திருநெல்வேலி – 627 011 என்ற முகவரியிலோ அல்லது 0462 – 258 1488, 93848 24280 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
எனவே தகுதியான பயனாளிகள் நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பத்தினை திருவாரூர் மாவட்டத்தில் ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்திட வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கிசான் கிரெடிட் கார்டு APPLICATIIN DOWNLOAD LINK
அல்லது நீங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கடன் அட்டையை பூர்த்தி செய்து அந்த விண்ணப்ப படிவத்துடன் சேர்க்கவேண்டியது நில ஆவணம், ஆதார் அட்டை, புகைப்படம் வழங்க வேண்டும்.
Post a Comment