இலவச போர்வெல் திட்டம் 2020-21 விவசாயிகளுக்கு 10.19 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு



விவசாய குழுக்களுக்கு சமுதாய ஆழ்துளை கிணறு, பம்பு செட்டுகளுடன் பாசன வசதியை உருவாக்கித் தரும் திட்டத்திற்காக ரூ. 10.19 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

திட்டத்தின் நோக்கம்

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதன் மூலம் சாகுபடிப் பரப்பை அதிகரித்து, விவசாயிகள் அதிக வருமானம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதன் தொடர்ச்சியாக, சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய குழுக்களை (Farmers Community Groups) உருவாக்கி, பம்பு செட்டுகளுடன் சமுதாய ஆழ்துளை கிணறு (Borewell) அமைப்பதற்கு, ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார் .

யாரெல்லாம் பயன் பெறலாம்

அதன்படி, முதற்கட்டமாக, 2020-21 ஆம் நிதி ஆண்டில் 14 மாவட்டங்களில் பாசன வசதி இல்லாத இடங்களில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய 118 விவசாய குழுமங்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு அரசு ரூ.10.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்துவதற்கும், முதல் தவணையாக ரூ.6.11 கோடியை நிதி வழங்குவதற்குமான அரசாணையினை வெளியிட்டுள்ளது.

தேர்வு செய்யபட்ட மாவட்டங்கள் எவை

அரியலூர், 
கடலூர், 
கிருஷ்ணகிரி, 
கன்னியாகுமரி, 
செங்கல்பட்டு, 
மதுரை,
புதுக்கோட்டை, 
இராமநாதபுரம், 
சேலம், 
சிவகங்கை, 
திருவள்ளுர், 
விருதுநகர், 
கள்ளக்குறிச்சி 
விழுப்புரம் 

ஆகிய 14 மாவட்டங்களில் பொதுப்பணித் துறையினால் நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டம் என கண்டறியப்பட்ட 47 குறுவட்டங்களில் 1,233 சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அவற்றின் மூலம் கிடைக்கும் நீரினை விவசாயிகளுக்கிடையே பங்கிட்டுப் பயன்பெறும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதெற்கெல்லாம் மானியம் கிடைக்கும்

இத்திட்டத்தின் கீழ், குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில்,

குழாய் கிணறு, 
ஆழ்துளை கிணறு, 
திறந்தவெளி கிணறு அமைத்தல், 
நீரினை இறைப்பதற்கு சூரிய சக்தி, 
மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் அமைத்தல்,
பாசன நீரினை வீணாக்காமல் நேரடியாக வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவுதல் போன்ற பணிகள் அனைத்துக்கும் மானியம் கிடைக்கும்

மானியம் எவ்வளவு கிடைக்கும்

இத்திட்டத்தின் கீழ், 
1.90 மீட்டர் ஆழத்தில் குழாய் கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ. 3 இலட்சமும்

2. 100 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.1.1 இலட்சமும்

3. 20 மீட்டர் ஆழத்தில் திறந்தவெளி கிணறு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.6.5 இலட்சமும்,

4. சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.3.25 இலட்சமும், 

5.மின்சார சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், 

6.நீர் விநியோக குழாய்கள் நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரமும் 
மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை
பட்டா சிட்டா அடங்கல்
வங்கிப் புத்தகம்
சிறு குறு விவசாயி சான்று


விண்ணப்பிப்பது எப்படி

இந்த ஆவணங்களை எடுத்துச் சென்று உங்கள் மாவட்டத்தில் இருக்கக்கூடிய வேளாண் துறை அதிகாரிகளை அணுகுங்கள் அவர்களின் உதவியுடன் உங்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உங்கள் ஊரில் உள்ள வேளாண் துறை செயலாளர்கள் தொடர்பு கொண்டு உங்கள் விவரங்களை கேட்டு அறிவார்கள் என்று நேரில் வந்து உங்க நிலத்தின் அளவுகள் நீங்கள் என்ன விவசாயம் செய்கிறீர்கள் என்று அனைத்துமே அவர்கள் தெரிந்து கொண்டு பின்பு எந்த இடத்தில் போர்வெல் அமைப்பது எவ்வளவு மானியம் வழங்குவது எவ்வளவு உங்களுக்குத் தேவைப்படும் குழுக்களில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று அனைத்தையும் கேட்டு அறிந்து பின்பு தான் உங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும் ஆணை வழங்கப் பட்ட உடன் உங்களுக்கான வேலைகள் தொடங்கி வைக்கப்படும்


Post a Comment

Previous Post Next Post