இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக 4% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள், கிசான் கிரெடிட் கார்டு என பல்வேறு திட்டங்கள் மூலமாகவும் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகளுக்கு முற்றிலுமாக வட்டியே இல்லாமல் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0% வட்டியில் கடன்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி ஹரியானா மாநில அரசு தற்போது விவசாயிகளுக்கு 0% வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டி சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மாநில அரசுகளின் பங்கு

விவசாயக் கடன்களுக்கு பொதுவாக 7% வட்டி வசூலிக்கின்றன. இதில் 3% வட்டியை மத்திய அரசும், 4% வட்டியை மாநில அரசும் பகிர்ந்துகொள்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 0% வட்டியில் கடன் வழங்க முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நேரடியாக வங்கியிலேயே கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.


கிரெடிட் கார்டு வசதி உண்டு - Kisan

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இதேபோல, கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கும் கிரெடிட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பு தொழில் செய்யும் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

Previous Post Next Post