மாட்டுப்பால் எப்போதுமே உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அதிலும் எருமைப்பால் தனிச்சுவை கொண்டிருப்பதற்கு, அதன் அதிகக் கொழுப்புச்சத்தே காரணம்.
ஆக விவசாயிகள் எருமைப் பண்ணை அமைத்து வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள மத்திய அரசின் தேசியக் கால்நடைத் திட்டம் (National livestock Mission) வழிவகை செய்கிறது.

மத்திய அரசின் கால்நடை மற்றும் பால்வளத்துறையால், நபார்டு(Nabard) வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் ஆண் எருமை மீட்டெடுப்பு மற்றும் வளர்ப்புத் திட்டமும் உள்ளது.

தகுதி (Qualification)

விவசாயிகள், தொழில் முனைவோர், தொண்டு நிறுவனங்கள், கம்பெனிகள், கூட்டுறவு சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத சுயஉதவிக் குழுக்கள் (SHG) கூட்டுப்பொறுப்புக் குழுக்கள்(JLG)

மானியம் (Subsidy)

வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு (APL) - 25% மானியம்.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் (BPL), பட்டியல் சாதியினர்(SC) மற்றும் பழங்குடியினருக்கு (ST) - 33% மானியம்.

நீலகிரி மாவட்ட மக்களுக்கு சலுகை
வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 33 %மும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர்(ST)ஆகியோருக்கு 50% மும் மானியம் வழங்கப்படுகிறது


நிபந்தனை

மானியமானது , கடன்தொகை முழுவதும் கட்டி முடித்தபின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். (கடன் வாங்கியதில் இருந்து குறைந்தது 3 வருடங்களுக்கு அப்பால்)
பயனாளி வங்கிக்கடனை செலுத்தத் தவறினால் மானியம் திரும்பப் பெறப்படும்.

பயனாளியின் பங்களிப்பு:

மொத்தத் திட்ட மதிப்பில் குறைந்தது 10%

காலஅவகாசம் (Time Frame)

பயனாளி முதல் தவணையை வங்கிக்கடன் வாங்கியதில் இருந்து ஒரு வருடத்திற்குள், திட்டத்தை முடித்துத் தொழில் தொடங்க வேண்டும்.

கடன் தவணைக் காலம்:

அதிகபட்சம் 9 ஆண்டுகள், கருணைக்காலம் 2 வருடங்கள்(அதாவது கடன் வாங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு தவணைத்தொகையைச் செலுத்தத் தேவையில்லை.

சிறிய பண்ணை:(Small farm)

25 எருமைக் கன்றுகள் வரை கொண்ட சிறிய பண்ணை அமைக்க கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சத் திட்ட மதிப்பு 6.25 லட்சம் வரை இருக்கலாம்.

இதில் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்குத் திட்ட மதிப்பில் 25 % அதாவது அதிகபட்சம் 1.56 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குத் திட்ட மதிப்பில் திட்ட மதிப்பில் 33.33 % அதாவது அதிகபட்சம் ரூ.2.08 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

வணிகப் பண்ணை (Commercial Farm)

25 முதல் 200 கன்றுகள் வரை உள்ள பண்ணைகள் வணிகப் பண்ணைகள் ஆகும். அதிகபட்சத் திட்ட மதிப்பு ரூ.48லட்சம் வரை இருக்கலாம்.

வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்குத் திட்ட மதிப்பில் 25 %, அதாவது அதிகபட்சம் 12லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குத் திட்ட மதிப்பில் 33.33 %, அதாவது அதிகபட்சம் ரூ.15.9 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இயந்திர மயமாக்கப்பட்டப் பண்ணை:

இதில் 200 முதல் 2 ஆயிரம் கன்றுகள் வரை வளர்க்கலாம். திட்ட மதிப்பு ரூ2.50 கோடி வரை இருக்கலாம்.

மானியம் (Subsidy)


வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு, திட்ட மதிப்பில் 25 %, அதாவது அதிகபட்சம் ரூ.62.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்.


வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்குத் திட்ட மதிப்பில் 33.33%, அதாவது அதிகபட்சம் ரூ.83.3 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.


விவசாயிகள் கவனத்திற்கு

தீவனம், இன்சூரன்ஸ், இதர செலவுகளையும் உள்ளடக்கியது திட்டமதிப்பு.

ஒரு பயனாளி ஒருமுறைக்கு மேல் பயன்பெற முடியாது.

மானியத்தை விண்ணப்பிக்கும் முறை:

1.வங்கிக்கடன் அனுமதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், வங்கிகள் https:// ensure.nabard.org என்ற இணையதளத்தில் வங்கிக்கடன் பற்றியத் தகவல்களைப் பதிவேற்றம் செய்து மானியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2. இணையதளத்தில் முதல் பதிவேற்றம் செய்த 30 நாட்களுக்குள் கடனில் முதல் தவணையைப் பயனாளிக்கு விடுவித்து, அந்தத் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

3. வங்கிகள் நபார்டில் இருந்து மானியம் பெற்றதும், அதை மானிய இருப்புக் கணக்கில் (Subsidy reserve fund Account)7 நாட்களுக்குள் வரவு வைக்க வேண்டும். மானியம் பெற்றதில் இருந்து 15 நாட்களுக்குள், வங்கிகள் பயன்பாட்டு சான்றிதழ் (Utilisatoion Certificate) சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு,
https://www.nabard.org/content1.aspx?id=599&catid=23&mid=530
மானியக் கையிருப்பு விவரங்களுக்கு:
https://ensure.nabard.org/NABARD/dataCollector/ViewBudgetReport என்ற இணையதளங்களைத் தொடர்புகொள்ளலாம்.



Post a Comment

Previous Post Next Post