இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்காக 25% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 25% இலவச மாணவர் சேர்க்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1 ஆம் வகுப்பில் சேரும் ஏழை குழந்தைகள், கட்டணமின்றி 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கலாம். இதற்காக தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்திவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கப்படும். மே மாத இறுதியில் முடிவடையும்.

இந்த நிலையில், இந்த ஆண்டு 25% இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைப் பணிகள் 27.08.2020 இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கத் தகுதி
உங்கள் குழந்தையின் வயது 3 முதல் 4 வரை இருக்கவேண்டும்

விண்ணப்பிப்பது எப்படி?


ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க கடைசி நாள்

 செப்டம்பர் 25 தேதி 25/09/2020

தேவையான ஆவணங்கள்


1.ஆண்டு வருமான சான்று 72,000 மிகாமல் இருக்க வேண்டும்
2.ஜாதி சான்று
3.இருப்பிட சான்று
4.முகவரி சான்று (ஆதார் கார்டு)
5.பிறப்பு சான்று

விண்ணப்பிக்கும் முறை

ONLINE APPLICATION LINKONLINE APPLICATION LINK CLICK HERE

இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக நீங்களாகவே விண்ணப்பிக்கலாம் ஆனால் இதில் விண்ணப்பித்தவுடன் உங்களது அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் செய்து கொண்டு அதனை நீங்கள் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஒன்று நீங்களாக கொடுத்தால் அதனை கொண்டு உங்களுக்கு போன் கால் செய்வார்கள் அதனால் நீங்கள் முடிந்தவரை தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு உங்கள் அருகாமையிலுள்ள பிரவுசிங் சென்டர்
செல்லுங்கள் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தை பதிவு செய்து உங்களுக்கு தேவையான பள்ளிகளை 5 பள்ளிகளை நீங்களே தேர்வு செய்யலாம்

பள்ளிகளை தேர்வு செய்யும் முறை


நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளிகள் உங்களது வீட்டில் இருந்து அல்லது ஊரில் இருந்து 3 கிலோமீட்டர் அருகில் இருத்தல் வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்த இலவச கல்வித் திட்டத்தில் உங்கள் குழந்தையின் பெயர் வருவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் கிலோமீட்டர் சேர்க்கைக்கான வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது இது அந்தந்த பள்ளிகளை பொருத்து மாறுபடும் சில சமயங்களில் உங்களுக்கு அருகாமையில் பள்ளி இருந்தால் அதுவே உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும் இதுதான் நடைமுறை விண்ணப்பித்த பின்னர் பள்ளியில் இருந்து அழைப்பு வரும் உங்களது விவரங்களை கேட்டு அறிவார்கள் நீங்கள் அருகாமையில் இருக்கும் பட்சத்தில் உங்களுக்காக ஒருநாள் ஒதுக்கப்படும் விண்ணப்பித்து அனைவருமே வந்து கலந்து கொள்வார்கள் குழந்தைகளின் விவரங்கள் அடங்கிய சீட்டுகள் பொருந்திய விவரங்கள் இருக்கும் அதனை கிலோமீட்டர் அடிப்படையில் வைத்து உங்கள் குழந்தைகளை தேர்ந்தெடுப்பார்கள் இலவச கல்வி திட்டத்துக்கு இப்படித்தான் இலவசக் கல்வித் திட்டம் குழந்தைகளுக்கு தேர்வு செய்யப்படுகிறது

இதுபோன்ற தகவலை பெற இந்த பக்கத்தை பாலோ செய்யுங்கள் மேலும் தகவல் அறிய எங்களது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நன்றி




Post a Comment

Previous Post Next Post