சூரியசக்தி பம்பு செட்டுகள் (Solar pump sets)அமைக்க மானியம் வழங்கும் திட்டம். இது ஒரு மத்திய மாநில அரசின் திட்டம் இந்த திட்டத்தின் பெயர் சூரியசக்தி பம்பு செட்டுகள் (Solar pump sets)அமைக்க மானியம் வழங்கும் திட்டம்.
இது ஒரு மத்திய மாநில அரசின் திட்டம் இந்த திட்டத்தின் பெயர் PM KUSUM YOJANA SCHEME என்று அழைக்கபடுகிறது
PM KUSUM YOJANA SCHEME பிரதமர் குசூம் யோஜனா திட்டம்
திட்டத்தின் நோக்கம்
வேளாண்மையில் நீா்ப் பாசனத்திற்கு தேவையான மின்சாரத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14-ஆம் ஆண்டு முதல் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்து கொடுத்து வருகிறது.
திட்டத்தின் பயன்
சூரிய சக்தி பம்பு செட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் சுமாா் 8 மணி நேரம் பாசனத்துக்கு தடையில்லா மின்சாரம் பெற முடியும்.
மானியம் எவ்வளவு கிடைக்கும்
இத்திட்டதில் மத்திய அரசின் 40% மானியம் வழங்கும்
மற்றும் மாநில அரசு (தமிழக அரசு) அரசின் 30% மானியம் வழங்கும்
என மொத்தம் 70% மானியம் வழங்கப்படுகிறது
விவசாயிகள் பங்கு எவ்வளவு
இதில் மீதம் உள்ள 30 சதவீதத்தை மட்டும் விவசாயிகள் சொந்த பணத்தை செலுத்தி சோலார் பம்பு செட்டை அமைத்துக்கொள்ளலாம்.
17,500 சோலார் பம்புசெட்டுகள் அமைக்க திட்டம் (Solar pump sets)
2020-2021-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சோலார் pump sets Motor வகைகள்
1. நீர் மூழ்கி பம்ப் செட் அமைப்புகள்
(water filled motors )
2. நீர் மூழ்கி பம்ப் செட் அமைப்புகள்
(oil filled motors )
3.தரை மட்டத்தில் அமைக்கும் பம்ப் செட் அமைப்புகள்
விலை பட்டியல் (Subsidy Tarriff)
திறந்த வெளி கிணறுகளில் அமைக்கும் சோலார் பம்பிற்கான மொத்த விலை மற்றும் மானிய விவரம் :
(மொத்த விலை என்பது நிறுவுதல் செலவு,வரிகள்,5 ஆண்டு கால பராமரிப்பு,மற்றும் காப்பீடு செலவுகளை உள்ளடக்கியது)
நீர் மூழ்கி பம்ப் செட் அமைப்புகள்
(water filled motors )
5HP-DC : (230 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ2,42,303/- ல் மானியம் ரூ 1,69,612/-
விவசாயி பங்குத்தொகை ரூ 72,691/-
5HP-AC : (230 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ2,37,947/- ல் மானியம் ரூ 1,66,563/-
விவசாயி பங்குத்தொகை ரூ 71,384/-
7.5HP-DC : (320 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ3,49,569/- ல் மானியம் ரூ 2,44,698/- கிடைக்கும்
விவசாயி பங்குத்தொகை ரூ 1,04,871/-
7.5HP-AC : (320 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ3,16,899/- ல் மானியம் ரூ 2,21,829/-
விவசாயி பங்குத்தொகை ரூ 95,070/-
10HP-DC : (490 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ4,39,629/- ல் மானியம் ரூ 3,07,741/- கிடைக்கும்
விவசாயி பங்குத்தொகை ரூ 1,31,889/
10HP-AC : (490 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ4,37,669/- ல் மானியம் ரூ 3,06,368/-
விவசாயி பங்குத்தொகை ரூ 1,31,301/
நீர் மூழ்கி பம்ப் செட் அமைப்புகள்
(oil filled motors ) :
10HP-DC : (490 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ4,59,000/- ல் மானியம் ரூ 3,07,741/-
விவசாயி பங்குத்தொகை ரூ 1,51,260/
10HP-AC : (490 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ4,54,967/- ல் மானியம் ரூ 3,06,368/-
விவசாயி பங்குத்தொகை ரூ 1,48,598/-
தரை மட்டத்தில் அமைக்கும் பம்ப் செட் அமைப்புகள்:
5HP-DC : (100 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ2,40,122/- ல் மானியம் ரூ 1,60,085/-
விவசாயி பங்குத்தொகை ரூ 72,037/
5HP-AC : (100 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ2,33,664/- ல் மானியம் ரூ 1,63,565/-
விவசாயி பங்குத்தொகை ரூ 70,099/-
7.5HP-DC : (100 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ3,67,525/- ல் மானியம் ரூ 2,67,267/-
விவசாயி பங்குத்தொகை ரூ 1,10,258/-
7.5HP-AC : (100 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ3,47,077/- ல் மானியம் ரூ 2,42,954/-
விவசாயி பங்குத்தொகை ரூ 1,04,123/-
10HP-DC : (145 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ4,34,729/- ல் மானியம் ரூ 3,04,310/-
விவசாயி பங்குத்தொகை ரூ 1,30,419/-
10HP-AC : (145 அடி ஆழம் வரை ) :
மொத்த விலை ரூ4,37,729/- ல் மானியம் ரூ 3,04,310/-
விவசாயி பங்குத்தொகை ரூ 1,30,419/-
தேவையான ஆவணங்கள்
• ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல்
• சிறு குறு விவசாயி சான்று (தேவை படும் பட்சத்தில்)
• பாஸ்போர்ட் போட்டோ
•நில ஆவணங்கள் (பட்டா,சிட்டா,அடங்கல்)
•தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பதிவு அட்டை நகல்
• தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் பெறப்பட்ட இலவச மின் இணைப்பினை துறக்க முன்வரும் கடிதம்/இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்து இருந்தால் அதனை திரும்ப பெறுவதற்கு இசைவு கடிதம்.
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply)
இத்திட்டத்தின் மூலம் பயன் பெற ஆர்வமுடைய விவசாயிகள் அந்த அந்த மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்தில் உள்ள உதவிசெயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை (அல்லது) மாவட்ட செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா
https://kusum-yojana.co.in/ மற்றும் https://www.onlinekusumyojana.co.in/ மற்றும் http://onlinekusumyojana.com/ ஆகிய 3 புதிய மோசடி வலைத்தளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பிரதமர் குசூம் யோஜனாவுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை இந்த வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டாம் மற்றும் இந்த இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்.
பிரதமர் குசூம் யோஜனா Help Line No
தொடர்பு எண்:
011-2436-0707, 011-2436-0404
PM KUSUM டோல் இலவச எண்: 1800-180-3333
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.mnre.gov.in
Post a Comment