வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறுவடைக்குப்பின் சார்பு பொருள்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் 2020 -21 ஆம் வருடத்திற்கு கருவிகள் தனியாருக்கு பொதுப்பிரிவினருக்கு 50% மற்றும் இதர பிரிவினருக்கு 60 % சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரவும், தொழிற்சாலை பெருக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கில் விளைபொருள்களுக்கு அதிகமான விலை கிடைக்கும் நோக்கிலும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் உள்ள கருவியை மொத்த விலை கொடுத்து வாக்கிய பின்னரே மானியம் வேண்டி அரசிடம் விண்ணப்பிக்க முடியும், அதை தொடர்ந்து மானிய தொகை கணக்கிடப்பட்டு அந்த தனிநபரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் (மர மற்றும் உலோகத்திலான உருளைகள்)

மொத்த விலை ரூ.2,00,600 (5 மாடல்கள்) 

பொதுப்பிரிவினருக்கு ரூ.1,00,300

பட்டைய வகுப்பினருக்கு ரூ.1,20,360

தென்னை மட்டை தோலுரிக்கும் உரிக்கும் இயந்திரம்

மொத்த விலை ரூ.1,40,000

பொதுப்பிரிவினருக்கு ரூ.60,000

பட்டைய வகுப்பினருக்கு ரூ.75,000

ராகி சுத்தம் செய்து கல் நீக்கும் இயந்திரம்

மொத்த விலை ரூ.65,100, ரூ.82,950 (2 மாடல்கள்)

பொதுப்பிரிவினருக்கு ரூ.26,040, ரூ.33,180

இதர வகுப்பினருக்கு ரூ.32,550, ரூ.41,475

மாவு அரைக்கும் இயந்திரம்

மொத்த விலை ரூ.47,250, ரூ.58,880, ரூ.89,250, ரூ.64,310 (4 மாடல்கள்)

பொதுப்பிரிவினருக்கு ரூ.23,625, ரூ.29,400, ரூ.44,625, ரூ.32,155

இதர வகுப்பினருக்கு ரூ.28,350, ரூ.35,280, ரூ.44,625, ரூ.38,586

கால்நடை தீவனம் தயாரிக்கும் இயந்திரம்

மொத்தவிலை ரூ.76,650

பொதுப்பிரிவினருக்கு ரூ.38,325

இதர பிரிவினருக்கு ரூ.45,990

விண்ணப்பிப்பு மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் 

மேற்கண்ட இயந்திரங்கள் விரும்பும் நபர்கள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை கீழ்கண்ட சான்றுகளுடன் அணுகவும்

ஆதார் கார்டு

வங்கி முதல் பக்க நகல்

பாஸ்போர்ட் போட்டோ

சிட்டா அடங்கல்

மும்முனை மின்சார வசதியுடன் கூடிய 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள இடம்.

Post a Comment

Previous Post Next Post