தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை மேலும் அதிகரிக்கும் வகையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.1.79 கோடி உத்தேச இலக்கு பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

இதன் மூலம் 140 ஹெக்டேர் மானியத்தில் எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாளி, மாதுளை மற்றும் சப்போட்டா போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

பாரம்பரிய பயிர்கள் (Traditional Crops)

பாரம்பரிய வகை பழப்பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15,000 வீதம் 20 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

காய்கறி
கத்தரி, மிளகாய், மற்றும் தக்காளி நாற்றுகள் ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 37 ஹெக்டேருக்கும், பாகல், வெண்டை, புடலை, தா்பூசணி, மற்றும் சுரைக்காய் போன்ற காய்கனி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 வீதம் 70 ஹெக்டேருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

முருங்கை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 5 ஹெக்டேர், உதிரிப்பூக்கள் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.16,000 வீதம் 10 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும்.

தேனீப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களுக்கு மானியம், மண்புழு உரப்படுக்கை அமைப்பதற்கு ஒரு உரப்படுக்கைக்கு ரூ.25,000/- வீதம் 6 உரப் படுக்கைகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனுபோகச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் குறிப்பிட்ட இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை மேலும் அதிகரிக்கும் வகையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.1.79 கோடி உத்தேச இலக்கு பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இதன் மூலம் 140 ஹெக்டேர் மானியத்தில் எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாளி, மாதுளை மற்றும் சப்போட்டா போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

பாரம்பரிய பயிர்கள் (Traditional Crops)

பாரம்பரிய வகை பழப்பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15,000 வீதம் 20 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

காய்கறி
கத்தரி, மிளகாய், மற்றும் தக்காளி நாற்றுகள் ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 37 ஹெக்டேருக்கும், பாகல், வெண்டை, புடலை, தா்பூசணி, மற்றும் சுரைக்காய் போன்ற காய்கனி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 வீதம் 70 ஹெக்டேருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

முருங்கை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 5 ஹெக்டேர், உதிரிப்பூக்கள் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.16,000 வீதம் 10 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும்.

தேனீப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களுக்கு மானியம், மண்புழு உரப்படுக்கை அமைப்பதற்கு ஒரு உரப்படுக்கைக்கு ரூ.25,000/- வீதம் 6 உரப் படுக்கைகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், 

குடும்ப அட்டை நகல், 

அடங்கல், 

கணினி சிட்டா, 

புகைப்படம், 

ஆதார் அட்டை நகல்,

வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்

 மற்றும் அனுபோகச் சான்று

 ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள 

வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். 

மேலும் குறிப்பிட்ட இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post