விவசாய மின் இணைப்பு பெற, காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, விரைவு மின் இணைப்பு வழங்கும், 'தத்கல்' திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், 5 குதிரை திறனுள்ள மின் மோட்டாருக்கு, 2.50 லட்சம் ரூபாய்,
7.50 திறனுக்கு, 2.75 லட்சம் ரூபாய்.
10 திறனுக்கு, 3 லட்சம் ரூபாய,
15 குதிரை திறனுக்கு, 4 லட்சம் ரூபாய் வீதம்,
ஒரு முறை கட்டணம் செலுத்தும், 25 ஆயிரம் விண்ணப்பதாரருக்கு, இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி, வரும், 21ம் தேதி முதல், அக்., 31ம் தேதி வரை, பணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், அக்., 31 வரை பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களும் ஏற்கப்படும்.
50ஆயிரம் இணைப்புகள் (50,000 Connection)
இது தவிர, 25 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள், சாதாரண வரிசை மற்றும் திருத்தப்பட்ட சுயநிதி திட்டங்களின் கீழ் வழங்கப்படும்.
நடப்பாண்டில், விவசாயிகளின் நலன் கருதி, 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இவ்வாறு, அமைச்சர் கூறினார்
Post a Comment