ATM கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கும் வசதி- அறிமுகப்படுத்தியது SBI!
ATM cashless facility introduced by SBI !
வாடிக்கையாளர்களுக்கு ATM மில் பணம் எடுப்பதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ATM கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கும் வசதியை SBI வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.
அவசரத் தேவைக்காக பணம் எடுக்கச் செல்லும்போது, ATM கார்டை மறந்துவிடுகிறோமல்லவா! அத்தகைய சந்தர்ப்பத்தில் பயன்படுவதற்காக, ATM விதிகளில் மாற்றத்தைப் புகுத்தியுள்ளது SBI.
டெபிட் கார்டு இல்லாமல்
ஏடிஎம் கார்டு இல்லாத நேரத்தில் பணம் எடுப்பதற்கு மொபைல் போன்களிலேயே வசதிகள் உள்ளன. பல்வேறு வங்கிகள் மொபைல் ஓடிபி (Mobile OTP) மூலமாகவே பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது யோனா ஆப் (Yono -app) மூலமாக இந்த வசதியை வழங்கி வருகிறது.
வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே இப்படி பணம் எடுக்க முடியும்.
அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் மட்டுமே இவ்வாறு பணம் எடுக்க முடியும். பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வசதி எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை எடுப்பதற்கு மட்டுமே பொருந்தும். தற்போத அமலுக்கு வந்துள்ள இந்த சேவையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்களில் மட்டுமேப்பெற முடியும்.
Post a Comment