தமிழகத்தில் 5.8 லட்சம் ரேஷன் கார்டு சர்க்கரை அட்டைகளாக இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதுபற்றி மாநில அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறைக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனை ஆராய்ந்ததை அடுத்து அமைச்சர்் காமராஜ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசிி அட்டைகளாக மாற்றிக் கொள்ள  எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடம் சமர்பிக்கலாம். இதையடுத்து தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பலரும் விண்ணப்பிக்கத் தொடங்கினர். இந்த சூழலில் பொங்கல் பரிசாக அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்றைய தினம் அதிரடியாக அறிவித்தார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய போது, இப்படியொரு இனிப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

வழக்கமாக பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் இரண்டரை மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிசு சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ரேஷன் அட்டைகளாக மாற்ற இன்றே (டிசம்பர் 20) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் பொங்கல் பரிசு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியது சட்டமன்ற தேர்தலை ஒட்டி சுய நலத்திற்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பா என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.


அதற்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் புயலால் பாதித்த தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது தவறா? ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும். அதனால்தான் அவர்களது துயர்துடைக்க பொங்கல் பரிசை அறிவித்ததாக முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post